பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

321


அழித்துவிட்டார். எனவே யோகி இடையனாகிய மூலன் உடலோடு இருந்தபடியே மூவாயிரம் பாடல்கள் பாடினார் - என்பது கதை. இது உண்மையா? இல்லை - கற்பனை. இடையனுக்கு இவ்வளவு ஆற்றல் உண்டு என்னும் பெருமை வெளிவராதவாறு இவ்வாறு வரலாறு மாற்றப்பட்டது. மற்றொன்று காணலாம்:

மாடு மேய்த்த இடைச் சிறுவன் ஒருவன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? - என்று கேட்டு ஒளவையாரை மடக்கி விட்டான். இந்தப் பெருமையையும் இடைக் குலத்திற்குக் கொடுக்க மனமின்றி, முருகன்தான் இடைச் சிறுவனாக வந்தான் எனக் கதையை மாற்றி விட்டனர் உயர் குலத்தினர். மற்றும் ஒன்று வருக;

வடமொழிப் புலவனாகிய காளிதாசன் உலக மா கவிகளுள் ஒருவன். இவன் இடைக் குலத்தினன் . ஆடு, மாடு மேய்த்தது உண்டு. இந்த இடையனின் நாக்கில் காளி ஏதோ எழுதினாள்; அதனால்தான் இவன் பெரிய கவிஞனானான் - என்று கதை கட்டி விட்டனர். காளிதாசன் பார்ப்பனன் - ஆனால் ஆடுமாடு மேய்த்தான் என்று இமாலயப் புளுகு புளுகி வைத்துள்ளனர் உயர் குலத்தினர். பார்ப்பனன் ஆடு மேய்ப்பதில்லை. ஒருவேளை, ஆரியர்கள் ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்று சிலர் கூறும் வரலாற்றுச் செய்தியின் நினைவில் இவ்வாறு உயர்குலத் தினர் உளறி வைத்துள்ளார்களோ?

இங்கே ஓர் அணுகுண்டு விழப்போகிறது. அதாவது, வடக்கே ஆயர்பாடியில் வளர்ந்ததாகக் கூறப்படும் கண்ணனும் (கிருஷ்ணனும்) ஆயர் குலத்தில் பிறந்தவனே. வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தை, ஆயர்பாடியில் நந்தகோபன் - அசோதை ஆகியவரின் வீட்டில் கொண்டு