பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

சுந்தர சண்முகனார்


புகாரில் தெருத்தெருவாய் வலம்வரச் செய்து ஊரார்க்கு அறிவிக்கச் செய்தனர். இது பெரிய இடத்து விவகாரம். யானையைக் கண்டு ஆண்களே இன்று அஞ்சுவதுண்டு; அன்று பெண்கள் யானை மீதேறி அறிவித்தது வியப்பு.

“யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்”
(1: 43, 44)

என்பது பாடல் பகுதி. ‘ஈந்தார் மணம்’ என்னும் தொடர் மிகவும் அழகியது - சுவையளிப்பது.

இக்காலத்தில், அழைப்பிதழ் அச்சடிக்கும் பெண் வீட்டார் பெண்ணின் பெயரை முதலிலும் மாப்பிள்ளையின் பெயரை அடுத்ததாகவும் அமைக்கின்றனர்; மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளையின் பெயரை முதலாவதாகவும் பெண்ணின் பெயரை இரண்டாவதாகவும் அமைப்பர்.

சிலப்பதிகாரத்தில் திருமண அழைப்பிதழ் அமைத்துள்ள இளங்கோவடிகள் கண்ணகியின் பெயரை முன்னும் கோவலன் பெயரைப் பின்னும் அமைத்துள்ளார். (இளங்கோ பெண் வீட்டாரா? இல்லையே).

நூலின் பெயராகிய சிலப்பதிகாரம் (சிலம்பு அதிகாரம்) கண்ணகியின் கால் சிலம்பு தொடர்பாக எழுந்தது. காப்பியத்தில் கதைத் தலைவனினும் கதைத் தலைவியே பெரிய அளவில் - இன்றியமையாத இடம் பெற்றுள்ளாள். எனவே, கண்ணகிக்கு முதலிடம் தரப்பட்டிருக்குமோ?

மற்றும், உமாபதி, உமா மகேசுவரன், அம்பிகாபதி, மீனாட்சி சுந்தரன், வள்ளி நாயகன், வள்ளி மணாளன், (சித்தி விநாயகர்), இலட்சுமி காந்தன், இலட்சுமி நாராயணன், இராதா கிருட்டிணன், சீதாராமன், சானகி ராமன் - என்பன போன்ற அடிப்படையில், கணவன் பெயரின் அறிமுகத்திற்கு முன் கண்ணகியின் பெயர் அறிமுகப் படுத்தப்பட்டிருக்குமோ? இளங்கோ இப்போது