பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சுந்தர சண்முகனார்


சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
இறைவன் குரவன் இயல் குணன் எங்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி
பண்ணவன் எண்குணன் பரத்தில் பரம்பொருள்

விண்ணவன் வேத முதல்வன்...” (176.189)

சைனக் கடவுளாகிய அருகனுக்கு இவ்வளவு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள், பகவன், இறைவன், எண்குணன் என்னும் பெயர்கள் திருக்குறள்-கடவுள் வாழ்த்துப் பகுதியிலும் உள்ளன. மற்றும், பரமன், சங்கரன் ஈசன், சதுமுகன் (நான்முகன்) என்னும் பெயர்கள் முறையே சிவனையும் பிரமனையும் குறிக்கும் பெயர்களாகும். சைனமதம் இந்து மதத்திலிருந்து பிரிந்ததாதலின், அங்கும் சிவன், திருமால், பிரமன் உண்டு. நன்னூல் என்னும் இலக்கணநூல் இயற்றிய சமணராகிய பவணந்தி முனிவர், நன்னூலின் எழுத்ததிகாரத் தொடக்கத்தில்,

“பூமலி அசோகின் புனைகிழல் அமர்ந்த

நான் முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே”

எனப் பாடியுள்ள காப்புச் செய்யுளில் நான்முகனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த சொல்லதிகாரத்தின் தொடக் கத்தில்,

“முச்சகம் கிழற்றும் முழுமதி முக்குடை

அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே”

எனப் பாடிய காப்புச்செய்யுளில் அச்சுதனைக் (திருமாலைக்) குறிப்பிட்டுள்ளார். நன்னூலில் பொருளதிகாரம் இல்லை. பவணந்தியார் பொருளதிகாரமும் இயற்றினார். அது கிடைக்காமல் போய்விட்டது என்று கூறுபவரும் உளர். ஒருவேளை பவணந்தியார் பொருளதிகாரம் இயற்றியது உண்மையா-