பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சுந்தர சண்முகனார்


கால் கோள் காதை

முடியிலும் தோளிலும்

சேரன் செங்குட்டுவன் வட நாடு நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, சிவன் கோயிலில் அளித்த திருவடி மாலையைதன் முடியில் சூடிக் கொண்டானாம். பின்னர், திருமால் கோயிலில் அளித்த மாலையைத் தோளில் அணிந்து கொண்டானாம்.

“ஆடக, மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்கின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்

தாங்கின னாகித் தகைமையின் செல்வழி”
(62-67)

சிவன் கோயிலும் திருமால் கோயிலும் இருந்ததாகவும் முதலில் சிவன் கோயில் அளித்ததை முடியில் சூடியதால் பின்னர்த் திருமால் கோயிலில் அளித்ததைச் செங்குட்டுவன் தோளில் அணிந்து தொண்டதாகவும் கூறப்பட்டிருப்பதிலிருந்து, செங்குட்டுவனுக்குச் சமய வேற்றுமை இல்லை என்பது புலனாகும்.

இந்நூலின் வேட்டுவ வரியில் கொற்றவையின் புகழும் ஆய்ச்சியர் குரவையில் திருமாலின் சிறப்பும், குன்றக் குரவையில் முருகன் பெருமையும் விளக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாகச் சிலப்பதிகாரம் 775 தெய்வங்களும் வீற்றிருக்கும் பொதுவான சொல் கோயிலாகத் திகழ்கிறது.

உறவினர் மதங்கள்

கோவலனும் கண்ணகியும் இறந்ததும், மாதவியும் மணிமேகலையும் புத்த மதத்தைத் தழுவினர். இருவரின்