பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

சுந்தர சண்முகனார்


தீய நிமித்தம் கண்டபோது அஞ்சினமை. அரசால் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனது அச்சம் முதலியன.

பெருமிதம் (வீரம்): கோவலன் யானையை அடக்கினமை. கோவலன் கருணை மறவனாகவும், இல்லோர் செம்ம லாகவும் விளங்கினமை. கோவலன், மாதவி ஆகியோர் யாழ் வாசிக்கும் கலைத்திறன் உடைமை. மாதவியின் ஆடல் பாடல் கலைத்திறன். செங்குட்டுவனின் வடபுல வெற்றி - முதலியன.

வெகுளி: கண்ணகியின் சினத்தால் பாண்டியனும், தேவியும், மதுரையும் அழிந்தமை. செங்குட்டுவன் சினத்தால் கனக விசயர் கல் சுமந்தமை. வெற்றிவேல் செழியன் பொற் கொல்லனுக்கு இறப்பு ஒறுப்பு கொடுத்தமை - முதலியன.

உவகை: கோவலனும் கண்ணகியும் மனையறம் புரிந்தமை. கோவலன் செல்வச் செழிப்பால் மாதவியை அடைந்து இன்பம் துய்த்தமை. மக்கள் கடலாடியும் பொழிலில் பொழுது போக்கியும் மகிழ்ச்சியாய் விளங்கினமை. முதலாயின.

மற்றும், மூவேந்தர் இடம் பெற்றிருத்தல், பல சமயக் கோட்பாடுகள் - பல கடவுள் கோயில்கள் - பல மன்றங்கள் - பல இயற்கைக் காட்சிகள் - வாணிகம் - பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் - வேட்டுவ வரி - ஆய்ச்சியர் குரவை - குன்றக் குரவை - முதலியன இடம் பெற்றிருத்தல் முதலிய பல்லாற்றானும், சிலப்பதிகாரம் கட்டுக்கோப்புடைய ஒரு பெருங் காப்பியம் என்னும் பெரும் பெயருக்கு மிகவும் தக்கது என்பது ஒருதலை.