பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

63


நீலியின் கெடு மொழிப்படியே பொய்க் குற்றம் சுமத்தப்பட்டுக் கொல்லப்பட்டான். அவன் மனைவி கண்ணகி பதினான்காம் நாள் ஒரு மலை உச்சியில் வாணாளை முடித்துக் கொண்டாள் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

இந்தக் கதை ஊழ்வினையையும் அதன் வலிமையையும் நம்பச் செய்யும் கட்டுக் கதை என்றே தோன்றுகிறது.

சிலம்பிசைப் பாட்டரங்கம்

ஊழ்வினை வந்து உருத்து ஊட்டியதால்தான், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல் கிடைத்தது. தமிழகத்தில் இருந்த கண்ணகி கோயில்கள் துரோபதை கோயிலாகவும் வேறு அம்மன் கோயிலாகவும் மாற்றப்படினும், பழைய வழக்கப்படி, அம்மன் கோயில்களில் பூசாரிகள் இரண்டு கைகளிலும் சிலம்புகளைப் பிடித்துக் கொண்டு அவற்றை ஒலிக்கச் செய்தபடியே பாடல்கள் பாடிக் கதைப் பாட்டரங்கம் நடத்துகின்றனர். இப்படி ஒரு கலை தமிழகத்தில் வளர்ந்திருப்பது கண்ணகியின் சிலம்பு தொடர்பினாலேயாகும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியதின் பயனோ இது!