பக்கம்:சிவஞானம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 1 Of

அதுவே நியாயம்-அதுவே நியாயம் " என விரைந்து கூறினர்.

அப்போது மற்றுமோர் சிறுவன் தாத்தா, அவ. னுக்கு என்ன பரிசில் கொடுக்கப் போகின்றீர்கள் ? எப். போது கொடுக்கப் போகின்றீர்கள் ?" என ஆவலுடன் மொழிந்தான்.

குப்புசாமிப் பிள்ளை சிறிது நேரம் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பின்னர், அவர் அச்சிறுவர். களே நோக்கி, ‘அன்பும் அருமையும் வாய்ந்த இன்பச் சிறுவர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் மிக்க அழகாகவே எழுதியிருக்கின்றீர்கள். இதில் சிறிதும் நீங்கள் சந்தே கம் கொள்ளவேண்டாம். ஆளுல், சிவஞானமோ ! உங்கள் எல்லோரையும் வென்றுவிட்டான். சிறுவர். களே, நான் இன்னின்னுருக்குப் பரிசில் கொடுக்கப் போகின்றேன் என்பதையும், அவை இன்னின்ன பரிசில் என்பதையும் என்னுல் இப்போது கூற வியலாது. நீங்கள் எல்லோரும் அடுத்த வாரம் காலை இவ்விடம் வாருங்கள் ; அப்போது உங்களுக்கு யாவும் விளங்கும். குழந்தைகளே ! காலம் நீடித்துவிட் டது. ஆதலின், நீங்கள் சீக்கிரம் வீடுபோய்ச் சேருங் கள்' என அன்புடன் மொழிந்தனர்.

இவ்விதம் குப்புசாமிப் பிள்ளை கூறி முடிந்ததும் அச் சிறுவர்கள் ஆனந்தத்தோடு தங்கள் இல்லம் ஏகினர். சுவாமியாரும், குப்புசாமிப் பிள்ளையும் அன்று இரவு நெடுநேரம் வரையில் ஏதேதோ பேசிக்கொண் டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/108&oldid=563140" இலிருந்து மீள்விக்கப்பட்டது