பக்கம்:சிவஞானம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 103

இந்த ஏற்பாடுகளைக் கண்ட சிறுவர்கள் தங்க ளிடம் பேரன்பு காட்டும் குப்புசாமிப் பிள்ளை அவர்களை யும் நாய்க்குட்டிச் சாமியாரையும் அளவற்ற அன் போடும் நன்றியோடும் நோக்கி எல்லையில்லா இன்பம்

கொண்டனர்.

குப்புசாமிப் பிள்ளை அவர்களை எல்லாம் ஒழுங்காக உட்கார வைத்து விட்டுக் ' குழந்தைகளே ! நான் சொன்னபடி உங்கட்கு இப்போது பரிசு வழங்கப் போகிறேன். பரிசு என்ன என்பதைச் சிறிது நேரத் தில் தெரிந்து கொள்வீர்கள். பரிசு உங்களைப் பாராட்டி ஊக்குவதற்கேயாகும். நீங்கள் யாவருமே மிகவும் அழகாக எழுதியிருந்தீர்கள், எல்லோருக்குமே பரிசு உண்டு. என்ருலும் உங்களில் சிறப்பாக எழுதி யிருந்த சிவஞானத்திற்கும் மணிவண்ணனுக்கும் தனிப் பரிசுகள் உண்டு. மற்றையவர்களும் அவர் களைப் பாராட்டுவதுடன் அவர்களைப் போல நன்ருக எழுதப் பாடுபடவேண்டும். எதிர்காலத்தில் நீங்களே இந்த நாட்டின் குடிமக்களாக விளங்கப் போகின்றீர் கள். ஆதலால், இளமையிலேயே இத்தகைய உயர்ந்த குணங்களை வளர்த்துக் கொண்டு நல்வாழ்வு வாழ்வீர் களாக ' என்று கூறி விட்டு அறையினுள் சென்று ஒரு சிறிய மூட்டையினை எடுத்துவந்து மேசைமீது வைத்தார். சிறுவர்கள் அது என்னவாக இருக்கும் என்று ஆவலோடு எட்டி எட்டிப் பார்த்தனர்.

குப்புசாமிப் பிள்ளை அவர்கள் அம் முட்டை யினை

அவிழ்த்து அதிலிருந்து இரண்டு நூல்களைக் கையில் எடுத்தார். 'குழந்தைகளே! இது திருக்குறள்; உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/110&oldid=563142" இலிருந்து மீள்விக்கப்பட்டது