பக்கம்:சிவஞானம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சி வ ஞ | ன ம்

வாழ வழிகாட்டும் உயரிய நூல். இதனைப் படித்து இதில் கூறியவாறு நீங்கள் வாழ முற்பட்டால் உங்கள் எதிர்காலத்தில் பேரும் புகழும் பெற்றுப் பெரு வாழ்வு வாழலாம். இன்ைெரு நூல் திருவருட்பா மன்னுயி ரைப் போலத் தன்னுயிரையும் எண்ணவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை ஒவ்வொருவருக்கும் உண்டாக்கக் கூடிய உயர்ந்த நூல் இது. இதனை நீங்கள் படித்து எல்லா உயிர்களிடத்தும் அன்புடை யவராய் வாழ்ந்து இறைவன் திருவருளைப் பெறுவீர் களாக' என்று கூறி அவற்றை நாய்க்குட்டிச் சாமியா ரிடம் கொடுத்துச் சிவஞானத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். நாய்க் குட்டிச் சாமியார் மிக்க மகிழ்ச்சியோடு சிவஞானத்தை அழைத்து எதிர்காலத் தில் சிறந்த அறிஞகைவும் பொது நலத்தொண்ட கைவும், எல்லா உயிர்கட்கும் அன்பளுகவும் வாழ்க என வாழ்த்தி அப்பரிசுகளை வழங்கினர். இவ்வாறே வந்திருந்த சிறுவர்கள் அனைவர்க்கும் வரிசையாகத் திருக்குறளும் திருவருட்பாவும் பரிசுகளாக வழங்கப் ши - бот.

இறுதியாகக் குப்புசாமிப் பிள்ளை அவர்கள் இரண்டு சிறு பெட்டிகளைச் சுவாமியாரிடம் கொடுத்தார். அவ் விரு பெட்டிகளுள் ஒன்றில் வெள்ளிப் பதக்கமும் மற் ருென்றில் தங்கப் பதக்கமும் இருந்தன. வெள்ளிப் பதக்கத்தில் ஒருபுறம் எறும்பைப்போல் ஓர் உருவமும் குப்புசாமிப் பிள்ளை என்னும் பெயரும், மற்ருெருபுறம் * மணிவண்ணனுக்கு அளிக்கப்பட்டது . எனவும் செதுக்கப்பட்டிருந்தன. பொற்பதக்கத்தில் ஒருபுறம் ஆட்டுக் குட்டியின் உருவமும் குப்புசாமிப் பிள்ளை என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/111&oldid=563143" இலிருந்து மீள்விக்கப்பட்டது