பக்கம்:சிவஞானம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சிவ ஞான ம்

வன் எங்களை விடுகின்ருனு ?-ஐயோ ! அப் பொழுதே அவன் மனம் பதைக்கின்றதே! அப்பாத கன் மிக்க விரைவுடன் வந்து என்னை இழுத்துக் கொண்டுபோய்க் கம்பத்திலன்ருே கட்டிவிடுகின் ருன் - ஒ இறைவனே ! ஈசனே ! தாங்கள் எப்போதுதான் திருவுளம் இரங்கி என் துயரைத் தீர்ப்பீர்களோ-அறியேன்.

(கண்ணிர்வடித்த வண்ணம் தலைகுனிந்து நிற்கின்றது.)

குதிரைக் குட்டி-(இரக்கத்துடன்) அருமை இளங் கன்றே, நீ உரைப்பது எனக்கு இன்னமும் நன்ருக விளங்கவில்லை. உன் குறை யாது ? உன்னைத் துன்புறுத்துவோர் யாவர் ?-வருந்த வேண்டாம் ; நிதானமாகச் சொல்:

பசுவின் கன்று-(ஏக்கத்துடன்) என் இன்னுயிர் நேயனே, நான் என்னென்று இயம்புவேன் ? -அது சொல்லி முடியாது. எனினும், சிறிது உரைக்கின்றேன் : நண்பா, என் எசமானனை நீ அறிந்திருக்கலாம். அவனை இடையன் என்று யாவரும் அழைக்கின்றனர். அவன் எனக்கப் புரியும் தீமைகட்கோ எல்லையில்லை.-இப்போது நான் பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. எனினும், நான் வயிருரப் பால் உண்டது என்றும் இல்லை.-அவன் அதிகாலையில் என்னை மிக்க அவசரத்துடன் கம்பத்தினின்றும் அவிழ்த்து என் அன்னையினிடம் விடுவான். அப்போது நான் மிக்க ஆனந்தத்தோடு துள்ளிக் குதித்து கொண்டு பால் உண்ணுதற்குச் செல்வேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/13&oldid=563045" இலிருந்து மீள்விக்கப்பட்டது