பக்கம்:சிவஞானம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு

இடத்தில் அலுத்து நின்றேன். அவன் நண்ப களுள் ஒருவன் என்னைப் பிடித்து வந்து அவன்

அருகே நிறுத்தின்ை. என்னைக் கண்டதும் அந்த மூர்க்கன் கொண்ட கோபத்திற்கு ஓர் அளவே யில்லை. அவன் கண்கள் இரண்டும் சிவப்பேறின; மீசை துடித்தது. ஆ நான் என்னென்று சொல்லுவேன் ! அச்சண்டாளன், தன் பற்களைக் கடித்துக்கொண்டு என் அருகே வந்தான்.தன் கையிலிருந்த கத்தியால் ஓங்கி என் வயிற்றில்

குத்தின்ை.

குட்டி-(துயரத்துடன்) அந்தோ அந்தோ !!-என்ன கொடுமை ! என்ன கொடுமை !! - ஆ !

அக்கொலைப் பாதகனை ஏன் அம்மா சும்மா விட்டீர்கள் ? அப்போதே அக்கொடியவனைக் கடித்துக் கொன்று போடலாமே ! - காலால் உதைத்து அவன் உயிரைப் போக்கியிருக்கலாமே! (கண்கலங்கி) ஐயோ ! ஈசனே ! இதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/30&oldid=563062" இலிருந்து மீள்விக்கப்பட்டது