பக்கம்:சிவஞானம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 61:

என் அன்பே ! ஆரமுதே, இன்பே, இன்னமுதே, என் அருமைக் கண்மணியே, நான் கூறும் நன் மதியை நீ என்றும் நினைவில் வை. நாம் இம்மானி டர்கட்கு மீளா அடிமை-மீளா அடிமை. இதனை நீ ஒரு போதும் மறவாதே ; நீ அன்பில் சிறந்து, அறிவில் முதிர்ந்து, உண்மையில் உயர்ந்து இருப் பினும் சரியே-இவைகளில் ஒரு சிறிதும் வாய்க்கப் பெருத மானிடன் ஒருவன் உன்னை விலை கொள் எளின் நீ அவனுக்கு அடிமையே. இதில் நீ சிறி தும் ஐயுறுதல் வேண்டாம். குழந்தாய், உன் தேகம் இளைக்கினும் சரியே-நீ நோயால் வருந்தினும் "சரியே உன் எசமானன் கட்டளையை நீ என்றும் கடக்காதே. ஏனெனில் நீ அடிமை. "அடிமை சொல் அம்பலம் எருது’. ஆதலால், என் ஆருயிரே, உன் தலைவன் உன்னை அடித்து அடித்து அல்லல் படுத்தினும், கோபத்தால் கொல்ல நினைக்கினும் நீ அவனுக்கு அடங்கி நடப்

LIITILI TH5—

இவ்வாறு கூறும்போது குட்டி தன் நிலைமையை

நினைந்து கண்ணிர் வடிக்கிறது.)

ஆ என் அருமைக் குழந்தாய், நான் உனக்கு ஏதே தோ உரைத்து உன்னைத் துன்புறுத்துகின்றேன். கண்மணி ! நீ கண்ணிர் வடிக்க நான் எங்ங்னம் சகிப்பேன். என் அன்பே, நீ அழவேண்டாம். இறைவன் உனக்கு ஒரு குறையும் செய்யான். கடவுளை நம்பினேர் கைவிடப் படுவாரோ ? ஈசன் எளியோர்க்கு நேசன். அவனன்றி அணுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/68&oldid=563100" இலிருந்து மீள்விக்கப்பட்டது