பக்கம்:சிவஞானம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சி வ ஞான ம்

அப்போது சிவஞானம் அவசரத்துடன், "தாதா இவைகளெல்லாம் எனக்கு வேண்டா. தாங்கள் சொல் வது உண்மையானல் குதிரையும் அதன் குட்டியும் எங்கே யிருக்கின்றன ? முன்னர் அதைச் சொல்லுங் கள் ' என்று விரைந்து கூறினன்.

'ஓ ! அவைகளா-அவை விலை கொடுத்து வாங் கிய அம்முதியவரிடம் இருக்கின்றன, என்று நிதான மாய்ப் பதிலளித்தார் குப்புசாமிப் பிள்ளை.

"என்ன தாதா, 'அம்முதியவர்' என்ருல் எங் களுக்கு எப்படித் தெரியும் ? அவர் ஊர், பெயர் முதலி யவற்றை உரைத்தாலன்ருே உண்மை தெரியும்? : என்று அவாவுடன் வினவினுன் சிவஞானம்,

"நல்லது-சிறுவர்களே, அம்முதியவர் இன்ஞர் என்பதை நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டுமா? என அமைதியாய்க்கேட்டார் குப்புசாமிப் பிள்ளை.

"ஆம் , தாதா, அவரை மட்டுமல்ல ; நாங்கள் அக் குதிரையையும், அதன் குட்டியையுங் கூட எங்கள் கண் களால் பார்க்கவேண்டும். அல்லையேல், நாங்கள் இதனைச் சிறிதும் நம்பமாட்டோம்,' என்று உரத்துக் கூறினன் சிவஞானம்.

"ஆம்-ஆம்: தாதா, அப்படித்தான் செய்யவேண் டும். அல்லையேல், நாங்கள் நம்பவே மாட்டோம்-நம் பவே மாட்டோம்,' என்று எல்லாச் சிறுவர்களும் அப் போது இரைச்சலிட்டுக் கூவினர்.

அப்போது குப்புசாமிப் பிள்ளை, புன்முறுவலோடு அவர்களை நோக்கி, "அன்புள்ள சிறுவர்களே, அவசரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/73&oldid=563105" இலிருந்து மீள்விக்கப்பட்டது