பக்கம்:சிவஞானம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சி வ ஞா ன ம்

கலக்கத்துடன் இருந்தான். அப்போது அவன் காலின் மீது மிக்க கனமான ஏதோ ஒன்று ஏறுவதை உணர்ந் தான் ; பின்னர், அது மிகவும் நீண்ட உடலுடையது. என்பதையும் அவன் உணர்ந்தான்.

பிள்ளைகளே, அஃது என்ன வென்று எண்ணு கின்றீர்கள் ? அஃது ஒரு பெரிய பாம்பு. இதை அந்தப் போர்வீரன் அப்போதே உணர்ந்துகொண்டான். எனி. னும் அவன் என் செய்வான் ! அவன் இருக்கும் அறை யோ. பூட்டப்பட்டிருக்கிறது; அவன் கையிலும் ஆயுதம், ஒன்றும் இல்லை. சத்தமிட்டுக் கூவினுலும் ஒருவராலும் வந்து உதவிசெய்ய முடியாது ; அந்தப் பெரும் பாம்பும் அவனை அப்போதே கடித்து விடும். ஆதலால், அவன் அசைவற்றுக் கட்டைபோல் கிடந்தான். அந்தக் கொடிய பாம்போ அவன் காலை விட்டு இறங்கவே இல்லை. அது மேலும் மேலும் நகர்ந்துகொண்டே வந்து முடிவில் அவன் தொண்டையை அடைந்தது. அப்போதும் அவன் சிறிதும் அஞ்சவில்லை ; உடலை அசைக்கவுமில்லை. உயிரின்றி விரைத்துக் கிடக்கும் பினம்போல் அவன் அப்போது இருந்தான். பின்னர், அது மெல்ல மெல்ல அவன் வயிற்றண்டை வந்து தன் உடலைச் சுருட்டிக் கொண்டு அவ்விடத்தே வெகு நேரம் வரையில் படுத்துக் கிடந்தது.

சிறுவர்களே. அப்போது அப்போர்வீரன் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நீங்களே சிந் தித்துப் பாருங்கள். அவன் வயிறு சிறிது அதிகமாய் வீங்கிலுைம், அல்லது வீக்கத்தில் குறைந்தாலும், அக் கொடிய பாம்பு அவனை உடனே கடித்துவிடும். ஆத லால், அதில் அவன் மிக எச்சரிக்கையாய் இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/89&oldid=563121" இலிருந்து மீள்விக்கப்பட்டது