பக்கம்:சிவஞானம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 81

" சிறுவர்களே, அந்தச் சிற்றறையிலேயே அப் போர்வீரன் அன்று பகல் முழுவதும் தனிமையாய் இருந்தான். மாலைப் பொழுது நெருங்கியது. யாதொரு வேலையும் இன்மையால் அவன் மிகச்சீக்கிரத்தில் படுத் துறங்க எண்ணினன். ஆதலின், அவன் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த கம்பளத்தின் ஒரு பகுதியைத் தலையணையாக மடித்து வைத்துக்கொண்டான் ; மிகுந் துள்ள பாகத்தை நிலத்தே விரித்து அதன்மேல் படுத் துக் கொண்டான். ஆல்ை, அப்போது அவனுக்கு உறக்கம் சிறிதும் வரவில்லை. எனினும், அவன் தன் கண்களை மூடிய வண்ணம் ஏதேதோ எண்ணிக்கொண் டிருந்தான். சுமார் இரவு ஏழு மணி யிருக்கும் ; அவ்வறை முற்றிலும் இருள்சூழ்ந்தது. அப்போர் வீரன் அப்போதுதான் சிறிது உறக்கம் கொள்ள ஆரம் பித்தான். அச்சமயத்தே, புஸ்-புஸ் ' என்னும் ஒரு வித ஒலி அவன் காதில் பட்டது. அதனுல் அவன் உறக்கம் நீங்கி, அந்த ஒலி உண்டானதின் காரணத் தையும், அது கேட்கும் இடத்தையும் கூர்ந்து கவனிக்க முயன்ருன். ஆல்ை, அவன் அவ்விடத்தை விட்டு எழுந்திருக்கவுமில்லை; தன் கண்களைத் திறந்து பார்க் கவும் இல்லை.

" சிறிது நேரத்திற்கெல்லாம் மறுபடியும் புஸ்புஸ் என்னும் ஒலி இன்னும் சற்று அதிகமாகக் கேட்க ஆரம்பித்தது. முன்பு பார்த்த சிறு சந்தின் வழி யாகத்தான் அந்த ஒலி வருகின்றது என்பதை அவன் உணர்ந்தான். எனினும் அஃது இன்னது என் பது அப்போதும் அவனுல் நன்கு அறிந்துகொள்ள முடியவில்லை. இவ்விதம் அவன் சிறிது நேரம் மனக்

சி. - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/88&oldid=563120" இலிருந்து மீள்விக்கப்பட்டது