பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருச்சிற்றம்பலம் உமாபதி சிவாசாரியார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராண சாரப் பாடல்களில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோத்திர பாடல் தண்கயிலே அது நீங்கி நாவலூர் வாழ் சைவனர் சடையனர் தனயனராய் மண்புகழ அருள் துறையான் ஒலகாட்டி மணம் விலக்க வன் தொண்டர் அதிகைசேர்ந்து நண்பினுடன் அருள்புரிய ஆரூர்மேவி நலம் கிளரும் பரவை தோள்நயந்து வைகித் திண்குலவும் விறன்மிண்டர் திறல் கண்டேத்தும் திருத்தொண்டத் தொகையருளால் செப்பினரே செப்பலரும் குண்டையூர் நெல் அழைத்துத் திருப்புகலூர்ச் செங்கல் செழும் பொன்னுய்ச் செய்து தப்பின் முதுகுன்றர் தரும்பொருள் ஆற்றலிட்டுத் தடத்து எடுத்துச் சங்கிலிதோள் சார்ந்து நாதன் ஒப்பில் தனித் துாது வந்து ஆறுாடு கீறி உறுமுதலே சிறுமதலே உமிழ நல்கி மெய்ப்பெரிய களிறுஏறி அருளால்சேர வேந்தருடன் வடகயிலே மேவினரே, திருச்சிற்றம்பலம்