பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I67 அங்ருெந்து சுத் தரர் திருப்புகலூர்க்குச் சென்ருர்; அங்கே இரவில் ஒரு மடத்தில் செங்கற்களையே தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கினர். செங்கற்கள் எல்லாம் பொன்னக மாறின. இதைப் பார்த்துச் சுந்தரர், "தம்மையே புகழ்ந்து’, என்ற பதிகம் ப? இறைவனத் துதித்தார்; அப் பொன்னைப் பரவையாருக்குக் கொடுத் தார். இதன் பின்பு பல தலங்களை வணங்கித் திருமழபாடி என்ற தலத்துக்குச் சென்ருர்; 'பொன்னுர் மேனியனே' என்று தொடங்கி பதிகம் பாடினர். பிறகு திருபாண்டிக் கொடுமுடி என்ற தலத்துக்குச் சென்ருர். அங்கே "மற்றுப்பற்று எனக்கு இன்றி' என்ற பதிகம் பாடினர். பின் திருக்கூட லையாற்றுார் நோக்கிச் சென்ருர் சுந்தரர். அவ்வூர்க்கு வழி சரியாகத் தெரியவில்லை. இறைவனே வந்து வழி "ாட்டிச் சென்று மறைந்தார். சுந்தரர் வியப்பு அடைந்து வடி வுடை மழுவேந்தி' என்ற பதிகம் பாடினர். அங்கிருந்து விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றம் என்ற தலத்துக்குச் சென்ருர், அங்கே பன்னிராயிரம் பொன் பெற்ருர்; அப்பொன்னை அங்கே உள்ள மணிமுத்தாறு என்னும் ஆற்றில் இட்டார்: திருவாரூருக்குச் சென்ருர், திருவாரூரில் உள்ள கமலாலயம் என்ற குளத்தில் அப்பொன்னே எடுத்தார்; இறைவனைப் 'பொன் செய்த மேனியினிர்' என்ற பதிகம் பாடி வழிபட்டார். பிறகு திருக்குருகாவூர் என்ற தலத்துக்குச் சென்ருர்: நண் பகல்-பசி வருத்தியது; சிவபெருமானே பொதி சோறு கொண்டு வந்து கொடுத்தார். இதனையறிந்த சுந்தரர் 'இத்தனை பாமாற்றை அறிந்திலேன்' என்று பதிகம் பாடினர். சோழநாட்டைவிட்டுத் தொண்டை நாட்டில் உள்ள காஞ்சி புரத்துக்குச் சென்ருர். வழியில் திருக்கச்சூர் என்ற தலத்தை அடைந்தார். அங்கு இறைவனை வணங்கினர்; அப்போது உச்சி வேளே. சுந்தரருடைய பசியை அறிந்த சிவபெருமான் வீடுதோறும் சென்று பிச்சை எடுத்து உணவு அளித்தார். சுந்தரம் அவ்வுணவை உண்டு 'முதுவாய் ஒரி கதற' என்ற பதிகம் பாடிஞர். பின்னர் சுந்தரர் திருவொற்றியூரை அடைந்தார்.