பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாபதி சிவாசாரியார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராண சாரப் பாடல்களில் திருஞான சம்பந்த சுவாமிகளின் தோத்திரப் பாடல் திருச்சிற்றம்பலம் காழிநகர்ச் சிவபாத விதயர் தந்த கவுணியர் கோன் அழுது உமையாள் கருதி ஊட்டும் ஏழிசையின் அமுது உண்டு தாளம் வாங்கி இலங்கிய நித்திலச் சிவிகை இசைய ஏறி வாழும் முயலகன் அகற்றிப் பந்தர் ஏய்ந்து வளர்கிழி பெற்று அரவின் விடம் மருகல் தீர்த்து விழிநகர்க் காசு எய்தி மறைக்கதவம் பிணித்து மீனவன் மேனியின் வெப்பு விடுவித்தாரே. ஆர் எரி இட்டு எடுத்த ஏடு அவை முன் ஏற்றி ஆற்றில் இடும் ஏடு எதிர் போய் அணைய ஏற்றி ஒர் அமணர் ஒழியாமே கழுவில் ஏற்றி ஒது திருப்பதிகத்தால் ஒடம் ஏற்றிக் கார் உதவும் இடி புத்தன் தலையில் ஏற்றிக் காயாத பனையின் முதுகளிைகள் ஏற்றி ஈரம் இலா அங்கம் உயிர் எய்த ஏற்றி இலங்கு பெருமணத்தானே எய்தினரே. திருச்சிற்றம்பலம்