பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


முழுவிலக்கணத்தோடு ஆளுந்தலைமை பிறர்க்கின்றாகச் சிவபிரான் ஒருவர்க்கே யுரித்தென்பதூஉம், அவர் இக்கருணையையே சக்தியாகவும், திருமேனிகளாகவுங் கொண்டு வெளிப்பட்டருளுவ ரென்பதூஉம், தங்கருணையமுதை யடியார்க்கு வலிந்து அச்சமுறுத்தியூட்டுவ ரென்பதூஉம், அடியார் பொருட்டு மிகவெளிய கருணை?? யுடையரென்பதூஉம், அவர் கருணை, யறக்கருணை மறக்கருணையென விருவகைப்படு மென்பதூஉம், அக்கருணையின் பயனாகவே ஆணவமலத்தாற் பிணிப்புண்டு கிடக்கும் ஆன்மா மாயா கன்மங்களாற் சிருட்டியாதிகளை யுற்று அறிவுவிளக்கம் பெறுமென்பதூஉம், அதுவே, இறைவனைக்கண்டற்கும், ஆனந்த வடிவனாகியவப் பெருமானைப் பெறுதற்கும் கருவியாகவுள்ள தென்பதூஉம், சீவர்களின்றன்மை யின்னதென்பதூஉம், கடமையாவதிது வென்பதூஉம், உலகியற் கடமைகளிவை யென்பதூஉம், சமயசம்பந்தமாகச் சிவபிரானிடத்துச் செய்யுங் கடமைகளிவை யென்பதூஉம், சமயங்களின் சமரசவுண்மையை யிவ்வாறு கோடல்வேண்டுமென்பதூஉம், தீக்ஷைபெறல், சரியாதி மார்க்கங்களினின்று கன்மங்களை விடாமற் சிவபிரானை வழிபடன் முதலியவையெல்லாஞ் சமயக்கடமைகளாமென்பதூஉம், அவற்றுண், முக்கிய கடமை ஆன்மா, தான் பெத்தகாலத்தும் முத்தி காலத்தும் மேற்கொள்ளத்தக்க அடிமைத்திறமேயா மென்பதூஉம், அதன்றன்மை மாட்சிகளின்ன வென்பதூஉம், அதனாலான்மாவெய்தும் பயனின்ன வென்பதூஉம், இத்திருத்தொண்டை ஆன்மா தன் கடமையென மேற்கொள்ளின், அதற்கு வீட்டின்பந்தருதலைச் சிவபிரான் றங்கடமையென மெற்கொள்வரென்பதூஉம் பிறவுமாம்.

அறிஞர்களே!

யான் இவ்வுபந்யாஸோபக் கிரமத்திற் கூறிய தேவாரப் பாசுரத்தில்,

“தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே”

என்னும் பிற்பகுதியாகிய இவ்விரண்ட‍டிக்கு முறையே சிவபிரான் கருணையையும், சீவர்கள் கடமையையும் புலப்படுத்தி, இவ்வுபந்நியாஸத்தை யினிது நிறைவேற்றின னென்பதையு மீண்டு ஞாபகமுறுத்துகின்றேன். சைவசமயமுஞ் சிவதரும‍முந் தமிழ்மொழியும் நீடுவாழ்க.

ஆனந்த௵
மாசி௴ ௨௪௳

ஓம் இங்ஙனம், அன்பன், மு.கதிரேசன், மகிபாலன்பட்டி.