பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


ந்து அருள்வழி நிற்றலால் அக்காலத்துச் செய்யப்படுங் கன்மங்கள் அவ்வான்மாவைத் தாக்கா. பிராரத்தவினை யநுபவித்தே தீரவேண்டுமெனினும், அஃது உடலூழாய்க் கழியுமன்றி யுயிர்க்கு இன்ப துன்பங்களைச் செய்யதென்பதாம். இவ்வுண்மையை “நாமல்ல விந்திரிய நம்வழியி னல்லவழி, நாமல்ல நாமு மரனுடைமை - யாமென்னின், எந்தனுவி னின்று மிறைபணியார்க் கில்லைவினை, முற்செய்வினை யுந்தருவான் முன்” என்னு மெய்கண்டார் திருவாக்கானுணர்க. இதனால் எல்லாம் அவன் செயலென்றிருத்தல் மிக நலமென்று போதரலான், தாம் செய்யந் தீவினைகளுக்கும் இதனையே பிரமாணமாக‍க் காட்ட முற்படலாமெனின்; நன்று நன்று! எப்பொருளையுஞ் சிவமயமாக‍க் கண்டு தானொரு முதலென்பதின்றி யவனே தானேயாகிய வந்நிலையினிற்கும் முக்தனுக்கும், கண்டபொருளெலாமின்பஞ் செய்வனவென்றும், அவை யெனக்கெனக்கென்றும், யானே நுகருமுதலென்றுங் கருதி மலவாய்ப்பட்டுழலும் பெத்தனுக்கும் எத்துணை வேறுபாடுளதென்பதை யுற்று நோக்குவார்க்கு உண்மை புலனாம். இதனால் முடிவுவரை பெரும்பயனைச் செய்வது, இத்திருத்தொண்டே யென்று அதன் மாட்சியுணர்ந்து அவ்வொழுக்கத்தை மேற்கொள்ளுதலே நங்கடமையாமென்பதும், விதிவிலக்கைக் கடந்து நிற்றல் நம்மனோர்க்குப் பொருந்தா தென்பதும் விளக்கமாம்.

என் அன்புள்ள சகோதர‍ர்களே!

இத்திருத்தொண்டை யியன்ற வரை செய்தலே சீவர்களின் முக்கிய கடமையென்றுணர்ந்து நம்பெருமானிடத்து எஞ்ஞான்றும் அன்புப்பணி பூண்டு ஒழுகுமின்கள்; பயன் செய்வது நிச்சயமாக அவர்கடமை யென்பதை நம்புமின்கள்; திருத்தொண்டு புரிவார் யாவரும் நம் உரிமைத் தமரென்பதை யுள்ளவா றுணர்மின்கள்; சிவபிரானாகிய பரமபிதாவினது பேரானந்தப் பெருஞ்செல்வத்தைப் பெறுதற்குரிய மக்கள் நாமே யென்றுணர்ந்து பெற்று இன்புறுமின்கள்; என் புன்சொற்களிற் பொதுளிய பிழைகளையெனன்றிவின் சிறுமை கருதிப் பொறுத்துக் கொண்மின்கள்; இவ்வளவே யான் இப்பேரவைக்கண் இன்று செய்யவேண்டிய கடமையென்பதை யுணர்ந்து இவ்வியாசத்திற் பரந்துகிடக்கும் பொருள்களைப்பற்றிய தொகையுரைக்குப் பொறுமையுடன் சிறிது செவிசாய்மின்கள்.

தொகையுரை

இத்துணையுங் கூறியவாற்றாற் போந்த பொருள்கள்:-

பரம கருணாநிதியாகிய சிவபிரானே வேதாகமங்களால், நிச்சயிக்கப்படும் பொருளென்பதூஉம், கருணையினிலக்கண மின்னதென்பதூஉம், அதனை