பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


திருவாக்கானு முணர்க. அஃதாவது, யான் அடிமையென் றுணர்ந்தபின் நின்னை வழிபடுதலேயன்றி யிவ்வுடல் கழியுமாற்றையு நின் றிருவடிப் பேறுபெறும் வழியையும், யான் எண்ணுதற் குரியனோ; அங்ஙனம் எண்ணுவேனாயின் என் அடிமையிருந்தவாறு மிக வழகிது என்பதாம். “சார்புணர்ந்து சார்புகெட வொழுகின்” என்றபடி தாதமார்க்க முதன் மூன்று மார்க்கத்தினுமொழுகுவோர் முத்தியின்பத்தில் விருப்புற்று மேன்மேற் செல்லுவர். நான்காவதாகிய சன்மார்க்கத் தொழுகுவோர் அவ்விருப்பமு மின்றித் தங்கடனிதுவென வுணர்ந்து சிறிது முனைத்தலின்றி யடங்கிநிற்பின் சிவபிரான், தங்கடனாகிய பேரின்பளித்தலை விரைந்து செய்வர்.

ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகளும் இவ்வுண்மை யடிமையாரைக் கூறுங்கால்,

“கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்”

என்று பாராட்டி யிருக்கின்றார். இவ்வருட் பாசுரத்தின் அருமையை யென்னென்பேன்! இத்திருத் தொண்டின் மாட்சியைப் பற்றித் தனியே யொரு வியாசமெழுதி வெளிப்படுத்தக் கருதியுளேனாதலி னீண்டு விரித்திலன். முடிவாக‍க் கூறுமிடத்து இவ்வடிமையே ஆன்மா பயன் குறியாது மேற்கொள்ள வேண்டுவதொன்றென்பது இவ்வாராய்ச்சியால் விளக்கமாம்.

(௧௦) இதன் பயன்.

இனி, இவ்வின்றியமையாக் கடமையாகிய அடிமையின் பயனைப் பற்றிச் சிறிது கூறுவேன். இதன் பயன் வீட்டின்பமேயென்பது முன்னர்ப் பெறப்பட்டதாயினும், இடைக்கணுண்டாம் பயன்களுமுள. ஆன்மா, எல்லாம் அவன் செயலேயன்றித் தன் செயலன்றென்றுணர்ந்து அருள்வழிநிற்பின், அதனாற் செய்யப்படும் கன்மங்கள் அதனைச் சாரா. கன்மங்கள் பெத்தகாலத்து நான் செய்கின்றேனென்று கருதுவதால் ஆன்மாவைத் தாக்கும். முக்திக்காலத்து யான் எனதென்னுமிருவகைப் பற்றுமின்றி யெல்லாமவன் செயலேயென்றுணர்