பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


றகன்று காணாக் கழிபரமு நானல்லேனெனக் கருதிக்கசிந்த, தொண்டு” என்றபடி, காணப்படும் பாசகாரியப் பொருள்களும் மேலாகிய பதிப்பொருளும் யானல்லேனென்று கருதியவழி முன்போல முனைத்தலின்றி யோங்குணர்வி னுள்ளடங்கி நிற்றலாம். இவ்வடிமையின் முக்கிய விலக்கணமாக‍க் கருதவேண்டியது, ஆண்டானாகிய சிவபிரான், ஒப்பாரு மிக்காருமின்றி யாவர்க்கு மேலாந்தலைவரெனவும் அடிமையாகிய யான், என்னின் ஒப்பானதுங் கீழானதுமாகிய பொருளொன்றுமின்றி யானே மிக‍க் கீழானவனெனவும் உள்ளவாறுணர்ந் தொழுகலேயாம். இதுகருதியே, “யாவர்க்கு மேலாமளவிலாச் சீருடையான், யாவர்க்குங் கீழாமடியேனை” என்றார் மணிவாசகப் பெருமானும். நம் சமயக்கொள்கை பலவற்றுண் மிக முக்கியமானது மிதுவேயாம். அதனாலன்றே, “தாழ்வெனுந் தன்மையோடு சைவமாஞ் சமயஞ்சாரு, மூழ்பெறலரிது” என்றுகூறும் சிவஞானசித்தியும்! இத்தொண்டு, தாதமார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்க்ம், சன்மார்க்கமாகிய நால்வகை யொழுக்கத்தினும் ஆன்மாவைவிட்டு நீங்காத‍தொன்றாம். “எவ்விடத்து மிறையடியை” யெனவும், “தொழும் பாகுமங்கு” எனவுங் கூறியபடி முக்தியினும் இவ்வான்மா அடிமையே யாமெனின், வேறிதன் மாட்சியை யெங்ஙனங் கூறுவேன்! உள்ளவாறு ஓரான்மா இறைவனுக்கு யான் என்றும் அடிமையே யென்றுணர்ந்து முனைப்பின்றி யொழுகுமாயின் முக்தி யின்பமாகிய பயனைச் சிவபிரான் தாமேதருவர். முக்தியை விரும்புதலும் அடிமை யிலக்கணத்துக்குக் குற்றமா மென்றால், வேறு பிரதிப்பிரயோசனங் கருதல் கூடாதென்பதைப் பற்றிக் கூறுதன் மிகையே. முக்தி யென்பது எல்லாவற்றையும் விடுதலன்றே? அவ்வேண்டாமையை வேண்ட லவசியமென்று நூல்கள் கூறவும், அதனை விரும்புதலுங் குற்றமென்ப தெங்ஙனம் பொருந்துமெனின்; ஆன்மா, தன்கடமை யின்னதென் ற‍றிந்து மேற்கொள்ளின், இறைவனுந் தன்கடமையைச் செய்வன் என்பது தேற்றமன்றே? அஃதுணர்ந்தும், சிறிதுஞ் சுதந்தரமில்லாத இவன் எற்கு இன்னது வேண்டுமென்று விரும்புதலுந் தவறேயாம். இவ்வுண்மையை “மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும், அண்ணாவெண்ணக் கடவேனோ வடிமைசால வழகுடைத்தே” என்னும்