பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

கணபதி துணை

சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்



(இது பூவாளூர்ச்‌ சைவ சித்தாந்த சங்கத்தின்‌ ஐந்தாம்‌ வருட நிறைவுக் கொண்டாட்ட காலமாகிய 7-8-15-ல்‌ சென்னைப்‌ பிரஸிடென்ஸிக் காலேஜ்‌ தமிழ்ப் பண்டிதர்‌ மஹாமஹோபாத்தியாய ப்ருஹ்மஸ்ரீ வே, சாமிநாதையரவர்‌கள்‌ அக்கிராசனத்திற்‌ கூடிய வித்துவான்களும்‌ பிரபுக்களும்‌ நிறைந்த மஹாசங்கத்தில்‌ மகிபாலன்‌ பட்டி வித்துவான்‌ ஸ்ரீ மு. கதிரேசச்‌ செட்டியாரவர்களால்‌ உபந்யாஸஞ்‌ செய்யப்பெற்றது)

அறிவிற்சிறந்து விளங்கு மாட்சிமிக்க அக்கிராசனாதிபதியவர்களே!

இவ்வவைக்கண்‌ விளங்கும்‌ அன்புமிக்க ஆன்றோர்களே! பெரியோர்களாகிய நுங்கள் அன்புரிமைசான்ற ஆணையைக் கடக்க வஞ்சி யொல்லும் வகையான் மேற்கொள்ள விரும்பியும், திருவருட்டுணை கொண்டும் இப்பொழுது செயக்கடவதாகிய என் கடமையை நிறைவேற்றத் துணிகின்றேன்.

யான் மேற்கொண்ட சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும் என்னும் இவ்விஷயத்தை விரித்துக் கூற‍ற்கு இடந்தருந் தேவாரத் திருப்பாசுரம் வருமாறு:-

நன்கடம்பனைப் பெற்றவள் பங்கினள்
றென்கடம்பைத் திருக்கரக் கோயிலாள்
றன்கடன்னடி யேனையுந் தாங்குதல்
என்கடன்பணி செய்து கிடப்பதே.

இப்பாசுரத்தின் அருளோலியும் பொருளுமே இவ்விஷயத்தை விளக்கற் குதவியாயின வென்பதை யிறுதியிற் கூறப்படுந் தொகையுரைக்கண் முடித்துக் காட்டுவேன்.