பக்கம்:சிவ வழிபாடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசுபதி எனப்படும் சிவமந்திரத்தை அறிந்தவனே! பழநி மலையில் இருந்து அருள் செய்யும் வேலவனே! அசுரர் சுற்றத்தை அழித்து, தேவர்கள் வாழ்வு பெறச் சிறையிலிருந்து மீட்ட இறைவனே! The greatness of the Six Lettered Mantra By appropriate words of praise, I worship You; and I should not forget You; My mind should not be immersed in the river of sorrow; I should chant in music the mystic six Lettered Mantra: Sa Ra Va Na Bha Va. And by that please do bless me with (all sorts of) comforts. Oh Lord, the perceiver of the meaning of the word of Siva, viz Pasupathi! O Velan who bestows grace seated on the Pazhani Hill! You have destroyed the giants with their kith and kin; O lord who released the celestials from prison! (44) இறைவன் எல்லாமாய் இருக்கிறான் என்றால் எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறான் என்பது பொருள். திருவையாற்றில் திருநாவுக்கரசர் களிறும் பிடியும் வருவதைக் கண்டார். சிவனும் உமையும் வருவதாகவே கொண்டார்; எல்லா உயிர் இனங்களையும் சிவமாகவும் சக்தியாகவும் கண்டார். அதனால்தான் உயிர் வகைகளையும் இறைவனோடு தொடர்பு படுத்தினார்கள் நம் முன்னோர், எருது சிவபெருமானுடைய வாகனம், ஆடு முருகப் பெருமானுக்கு உரியது. கருடன் திருமாலுக்கு தாமரையில் இலக்குமி வீற்றிருக்கிறாள். இப்படித் தெய்வத்தோடு தொடர்பு படுத்தாத உயிரினம் இல்லை. ஆகவேதான் எல்லா உயிர் இனங்களும் இறைவன் படைப்பு என்று அவற்றை நேசிக்கவேண்டும். 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/100&oldid=833313" இலிருந்து மீள்விக்கப்பட்டது