பக்கம்:சிவ வழிபாடு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று இவ்வகை இறைவா!) உன்னைப் பாடினேன்; (பாடி) ஆடினேன் ஆடி (நீ எங்கு இருக்கிறாய் என்று) தேடினேன். பிறகு விருப்பத்தோடு கூவினேன்; நா வற்றினேன்; கதறினேன்; மெய் சிலிர்த்து:இரண்டு கைகளையும் கூப்பினேன்; வானத்தில் இருந்து மழை பெய்வதுபோல என் இரண்டு கண்களிலிருந்தும் கண்ணிர் பொழிந்தது; விரும்பிச் சோர்வு அடைந்தேன். நான் இரும்பு போன்ற மனம் உடைய திருடன் ஆயினும் உனை விட்டு இருந்தது உண்டோ? இல்லையே) நீ எப்பொழுது முதல் இருக்கிறாய். அந்நாள் முதல் நான் இருக்கிறேன்; நான் உன் அடிமை அல்லவா? நான் ஒரு சிறிதும் அறியாத துரும்பு போன்றவன் ஆயினும், என்னைக் கைவிடுதல் உனக்குத் தருமம் ஆகுமோ? நீ என்னைத் தொண்டர்களோடு சேர்ப்பாய்! து.ாய்மையும், குணம் இன்மையும் ஆன மேலான தெய்வமே சிறந்த ஒளியே. இன்பமயமான கடலே Gold rarel Genn like One! Oh my Love! Oh my love of wisdom! O flood of ecstatic joy that springs in my knowledge! Thus I sang; d-re"; dancing 1 searched; with affection | called You; I became withered; I roared; I became horripilated; I folded my hands; my eyes shed tears just like the rain from the clouds. With desire, I became weary. I am an iron hearted robber; did I ever stand aloof? When doth thou, so am II Am I not your slave? | am after all a small refuse who knows not anything; is it justified on your part to forsake me? Please club me with Your devotees. O Pure one, devoid of qualities, the Supreme God, Light Divine, and the Ocean of Bliss! 106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/116&oldid=833349" இலிருந்து மீள்விக்கப்பட்டது