பக்கம்:சிவ வழிபாடு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தார் ΡΑΤΤΙΝΑΤΗΤΗΑR (55) மனைவி மக்கள் சுற்றம் என்ற பந்தம் இருக்கிறது அல்லவா? இவை எல்லாம் எது வரையில்: பணம், நிலம், முதலிய செல்வ வளம் இவையெல்லாம் நாம் இறந்த பிறகு உடன் வருகின்றனவா? இல்லையே, ஆகவே உள்ளவரையில் நல்லவன், நற்பண்புடையவன். நல்ல அறிவாளி என்று பிறர் கூறுமாறு வாழவேண்டும். இவ்வுலக வாழ்வை நீத்த பிற்கும் புகழ் ஒங்கி வளர்ந்திருக்க் வேண்டும். அத்தகைய முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கை ஆகும். * = கட்டி அனைத்திடும் பெண்டிரும் மக்களும் Katti Annaiththidum penndirum makkallurn காலத்தச்சன் Kaalaththachchan வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை Vetti murrikkum marampol sareraththai விழ்த்திவிட்டால் Veezhthivittaal கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால் Kotti muzhakki azhuvaar mayaanam kurugi appaal எட்டி அடிவைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே. Etti adivaippaaro irraivaa kachchi eagambane (உயிர் வாழும்போது) மனைவியும் மக்களும் நம்மைச் சார்ந்து அனைத்துக் கொண்டு இருப்பர் தச்சன் மரத்தை வெட்டி வீழ்த்துவது போல, இயமன் உடம்பை வீழ்த்துவான். அப்பொழுது (பெண்டிரும் மக்களும்) பறை அடிக்கச் செய்து, இரைச்சலிட்டு அழுவார்கள் மயானம் வரையில் வருவார்கள். அதற்குப் பிறகு வருவார்களோ? (வரமாட்டார்கள்) காஞ்சிபுரத்தில் திரு. ஏகம்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே! 113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/122&oldid=833363" இலிருந்து மீள்விக்கப்பட்டது