பக்கம்:சிவ வழிபாடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் ஆனந்தம் தரும் கடவுள் ஆவான்; அவன் சிறப்புப் பொருந்திய வேதங்கள் துதிக்கின்ற கடவுள் அவன் அறிவின் எல்லையில் உள்ள கடவுள்; அவன் ஒளியின் (நாதத்தின்) எல்லையில் இருக்கும் கடவுள்: அவன் அறியாமையை நீக்கி அறிவு ஆகிய ஒளியைத் தருகிற கடவுள்; நான் எதை நினைக்கிறேனோ அதை நினைத்தபடி எனக்குக் கொடுக்கிற கடவுள் என் இனிய பாடலைக் கேட்டு மகிழும் கடவுள்; அதனால் என்னைச் சிவம் ஆகவே ஆக்குகிற கடவுள் அக்கடவுளே சிற்றம்பலத்தில் விளங்குகிற கடவுள் ஆவார்; The Lord the Lamp of Grace, The Lord who admitted me into His Fold, The Lord rapturous dancing at the Hall, The Lord adored by Scriptures esteemed high, The Lord, the goal of knowledge and sound exalted, The Lord, remover of ignorance and bestower of splendour, The Lord, rejoicing at my lucid poetry makes me Siva Himself, -lt is the very same Lord renowned at the Hall of Wisdom. (63) தம்முடைய மனம் ஒருமைப்பாடு அடையவேண்டும் ஆனால் ஒரே வழியுண்டு. அதாவது இறைவனை விடாமல் தியானிப்பது ஆகும். தியானம் செய்யச் சிலரால் முடியாது. அதற்கு இன்னும் ஒரு வழி இருக்கிறது. அதாவது இறைவனுடைய திருநாமத்தை இடையறாது கூறுவது. அதுதான் ஜபம் எனப்படும். கடவுளின் எந்தத் திருப்பெயரையும் ஜபம் செய்யலாம். அந்தப் பெயர்கள்' எல்லாவற்றிலும் சிறந்தது திருவைந்தெழுத்து. அதாவது பூர் பஞ்சாட்சரம். அதாவது நமசிவாய என்பது. இம்மந்திரத்தை எல்லாரும் ஜபம் செய்வோமாக ஒம் நமசிவாய சிவாய நம ஒம் சொல்லுங்கள் ஒம் நமசிவாய சிவாய நம ஒம். 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/132&oldid=833385" இலிருந்து மீள்விக்கப்பட்டது