பக்கம்:சிவ வழிபாடு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டமா சித்திகளில் வல்லவரான அருணகிரிநாதர் தம் உடலைத் திருவண்ணாமலைக் கோபுரத்தே கிடத்தி, ஒரு கிளியின் உடலில் புகுந்து விண்ணுலகிற் பறந்து சென்றார். அவரது உயிரற்ற உடலைக் கண்ட மன்னன் அவர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததை அறியாது. அவரது உடலுக்கு எரியூட்டி ஈமக் கிரியைகளைச் செய்வித்தான். கிளியின் உருவில் திரும்பி வந்த அருணகிரிநாதர், நடந்ததை அறிந்து ஒருவாறு ஆறுதல் பெற்று. அவ்வுருவில் இருந்து கொண்டே"கந்தர் அநூ பூதி" யைப் பாடினார். அவ்வுருவிலேயே திருத்தணிகைக்கு பறந்து சென்று ஒர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் முருகப்பெருமானின் திருவடியில் அமர்ந்து பெருவாழ்வு பெற்றார். கந்தர் அலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவகுப்பு முதலிய பக்திப் பனுவல்களையும் அருணகிரிநாதர் இயற்றியுள்ளார். இவர் கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ΑΡ UΝΑGIRΙΝΑΤΗΑR The glory of Lord Muruga, sung in rhythmic metre is called Thirupugazh. These devotional songs were composed by Arunagirinâthar. He was the son of Venkadar and Muthammai. He grew up at Thiruvannamalai at his sister Adilakkumi's house and under her CaГЕ. Proficient in general knowledge and other subjects. Arunagiriyar fell a prey to a life of bad habits. He contracted leprosy and lost his wealth. All this made him quite upset and he decided to put an end to his life. One day he climbed the gopuram of the temple at Thiruvannamalai and jumped down. Lord Muruga went to his rescue by embracing him. He showed himself to Arunagiriyar and asked him to sing songs. In fact he gave the first word for a series of songs to be sung by him. That was the beginning of Arunagiriyār's singing hundreds of Thirupugazh songs in praise of God. The lines "Muthaitharu Paththi thirunakai" lead all the rest. 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/161&oldid=833447" இலிருந்து மீள்விக்கப்பட்டது