பக்கம்:சிவ வழிபாடு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Thou, Oh Lord art the thief who hath stolen my heart, shall make my heart your shrine. I know Thou wouldst appear in the form | visualise for art Thou not all forms? Lord I shall develop my devotion to capture Thee. 5. திருநீற்று மகிமை - மந்திரமாவது நீறு Mandhiram avadhu neeru சிவனை வணங்குபவர்கள் போற்றும் புனிதச் சின்னம் பூசும் திருநீறு. எல்லோரும் முடிவில் பிடி சாம்பலாவர் என்பதை நினைவு படுத்துவது திருநீறு. அது செருக்கழித்துச் சிந்தையிலே யாக்கை நிலையற்றது என்ற எண்ணத்தைப் பதித்து மனிதர்களைப் புனிதர்களாக்குகிறது. Why do the Saivites treat the ash which they smear on the foreheads as sacred? Does it not remind them that their bodies too will one day be reduced to ashes? Hence, it is the sacred ash that provokes spiritual thinking and prepares us for Thy Realisation ultimately. 6. தந்தையார் போயினார் Thandayar poyinar அழியும் உடலுக்காக அச்சப்படுவதேன்? இன்று நாமிருக்கிறோம். நம்மைச் சேர்ந்தவர்களிருக்கிறார்கள். இதற்கு முன் இருந்தவர்களெங்கே? சிந்தித்தால் சித்தம் தெளியும். நெஞ்சே அஞ்சாதே திருவாரூரானைத் தொழுவாய். Why show concern for this body which you know is perishable. We are here today and so are those related to us but where are those who were here before us? Dwell on this thought and clarify your mind. What need is there for fear if you but worship Him who resides in Arur. 7. ஐந்தெழுத்தின் பெருமை - காதலாகி Kadhalagi திருவைந்தெழுத்து என்று சொல்லப்படும் சிவாய நம' என்பதே பஞ்சாட்சர மந்திரம். சிவனே உனக்கு வணக்கம் 164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/175&oldid=833478" இலிருந்து மீள்விக்கப்பட்டது