பக்கம்:சீதா கல்யாணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சீதா கல்யாணம்


பாட்டுக்களை மட்டும் படித்தால், நமக்கு ஒரு தனி ஆனந்தமே உண்டாகும். கம்பன் கவி ஒவ்வொன்றிலும் இருக்கிறது அவன் முத்திரை.

'கம்பனுடைய கவிதையைப் பற்றி ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமானால் அதன் சிறந்த குணம் காம்பீர்யம் என்று சொல்லலாம். கம்பன் சிருங்காரத்தை அழகாகச் சொல்லுகிறான் என்பதில் தடை யில்லை. சோகம் சொல்லும் இடங்களில் எல்லாம் நம்முடைய கண்களில் நின்றும் தாரை தாரையாகக் கண்ணிர் பெருகும்படி செய்து விடுகிறான். ஆனால் அவன் வீரத்தையும், வியப்பையும், ரெளத்திரத்தையும் தன் சொந்தமாக்கிக் கொண்டு விட்டான். இவ்வளவு ரஸபாவங்களையெல்லாம் தன் காவியத்தில் அமைத்து அதை ஒரு பெரிய நாடக அரங்கமாகவே ஆக்கிவிடு கிறான். அவன் அந்த அரங்கத்தில் நடத்தும் பாத்திரங்கள் எல்லாம் உயிர் ஒவியங்களாக நமக்குக் காட்சி அளிக்கிறார்கள். கம்பன் என்ற பெயரைக் கேட்ட அளவிலே தமிழ்க் கவிதா மண்டலத்தின் மகோன்னத மான உச்சியும், கற்பனை உலகத்தின் விரிவும் சக்தியும், தமிழ்நாட்டின் கலைவாழ்வின் வளமும் சுவையும், எல்லாம் ஒரு நாடக அரங்கத்திலே தோன்றுவது போலத் தென்படுகின்றன.

இத்தகைய ஒர் அருமையான நூலைத்தான் உங்கள் கையில் நான் கொடுக்க விரும்புகிறேன். நூல் அளவில் பெரியது, ஆதலால் அதில் சிறந்த கவிச்சுவை நிறைந்த பாடல்களை மட்டும் பொறுக்கியெடுத்துக் கொடுக்க உத்தேசம். இப்போது பால காண்டத்தில் நூறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/12&oldid=1367702" இலிருந்து மீள்விக்கப்பட்டது