பக்கம்:சீதா கல்யாணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

9


இலக்கிய அறிவும் பெரிதும் துணை நின்றிருக்கின்றன. கம்பனைப் பற்றி நாம் இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும். -

இராம கதை வடமொழிப் புலவரான வால்மீக முனிவரால் உலகுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம். அக்கதை, மக்கள் வாழ்க்கையைப் பண்படுத்த ஒரு நல்ல சாதனம் என்று கண்ட கம்பன், அதைத் தமிழில் விருத்தப் பாவிலே ஆக்கிக் கொடுத்திருக்கிறான். கம்பன் தனது இராம கதையில் வால்மீகியை மிகவும் நெருக்கமாகவே பின்பற்றியிருக்கிறான் என்றாலும், இந்தக் கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியாது. கதை சொல்லும் ரீதியும், வாக்கின் நடையும், வர்ணனைகளும் அலங்காரங்களும், மனித உள்ளத்தின் உணர்ச்சிகளை எடுத்துச் சொல்லும் மாதிரியும் எல்லாம் கம்பனுடையதே. கதையை மட்டும் வால்மீகியிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவன் ஒரு தனிக் காவியமாகவே செய்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். -

கம்பனுடைய கவிகள் எல்லாம் திராக்ஷாபாகமாகவே அமைந்திருக்கின்றன. கம்பன் பாட்டுக்கள் என்றாலே அதற்கு ஒரு தனி நடை இருக்கும். ஓர் இனிமையும், ஒர் எளிமையும் இருக்கும். இன்று நம்மிடையே உலவிவரும் கம்ப ராமாயணம் என்ற புத்தகத்தில் பல பாட்டுக்கள் இடைச் செருகல்கள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த இடைச் செருகல்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கம்பன் பாட்டுக்கள் என்று சொல்லக்கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/11&oldid=1367692" இலிருந்து மீள்விக்கப்பட்டது