பக்கம்:சீதா கல்யாணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 45

விருப்பத்திற்கு இராமன் இணங்காத போது, அவனுடைய பாதுகைகள் இரண்டையும் பெற்று வந்து, அவைகளுக்கே பிரதிநிதியாக இருந்து அரசாண்டு வந்தான்.

ஆரண்ய காண்டம்:

தண்டகாரண்யம் புகுந்த இராமன், கோதாவரி நதிக் கரையிலே, பஞ்சவடி தீரத்திலே, ஒரு பர்னசாலை கட்டிக் கொண்டு, தன் தம்பி இலக்குமணனுடனும், மனைவி சீதையுடனும் வாழ்ந்து வந்தான். அப்பொழுது இலங்கை அரசன் இராவணன் தங்கை சூர்ப்பனகை என்பவள் வந்து, இராம, லக்குமணரின் அழகைக் கண்டு, அவர்களில் ஒருவரை மணந்து கொள்ள ஆசைப்பட்டாள்.இந்த அரக்கியை அவர்கள் வெறுத்து ஓட்டியும் அவள் போகாது நிற்கவே, அவளை அவமானப்படுத்த, இலக்குமணன் அவள் மூக்கை அரிந்து விட்டான். மூக்கறுபட்ட மூளி சூர்ப்பனகைக்காகப் பரிந்து வந்த கரதுாஷணாதி ராக்ஷசர்களையெல்லாம் இராமன் கொன்று தீர்த்து விடுகின்றான். இதன் பின்னால் அவள், இலங்கைக்கு ஓடி, தன் அண்ணனான இராவணனிடம் நடந்ததைச் சொல்லி, இராமன் மனைவியான சீதையை அவனுக் காகத் தூக்க எண்ணியபோது தான் மூக்கறுப்பட்ட தாகவும் கூறுகிறாள்.சீதையின் அழகைச் சூர்ப்பணகை எடுத்துக் கூறக் கேட்ட இராவணன், சீதையினிடம் மோகம் கொண்டு, வஞ்சனையால் அவளைக் கவர்ந்து சென்று, அசோகவனத்திலே சிறை வைத்து விடு கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/17&oldid=1367773" இலிருந்து மீள்விக்கப்பட்டது