பக்கம்:சீதா கல்யாணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. கோசல நாடு

இத்தகைய சரயு நதி ஓடுகின்ற நாட்டின் வளத்தைப் பற்றிக் கேட்பானேன்! வயல்களின் வரப்புக்களில் எல்லாம் முத்துக்கள் சிந்திக் கிடக்கின்றன; வாய்க்கால் கரைகளிலே காணப்படுவது தங்கக் கட்டிகள்தான்; பரம்பு அடித்துச் சமமாக்கிய இடத்தில் எல்லாம் பவளங்களே கிடக்கின்றன, தேன் அந்த நாட்டிலே தண்ணீர் பட்டபாடுதான் அன்னங்கள் அங்குமிங்கும் நடப்பதும், வண்டுகள் ரீங்காரம் செய்வதும் அழகிய காட்சிகளே. இவையெல்லாம் அந்த நாட்டின் செழிப்பைக் காட்டுகின்றன.


வரம்பு எலாம் முத்தம்; தத்து மடை எலாம் பணிலம்; மாநீர்க்

குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை

பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம், பாங்கர்

கரம்பு எலாம் செந்தேன்; சந்தக் காஎலாம் களிவண்டு ஈட்டம்.

(பணிலம் - சங்கு, குரம்பு - செய்கரை) பொதுவாக நாட்டின் வளத்தைக் கூறிய கம்பர் ஒரு சோலையில் நடக்கும் அழகிய காட்சி ஒன்றையும் சித்திரித்துக் காட்டுகிறார். மயில்களாகிய நாட்டியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/25&oldid=1367873" இலிருந்து மீள்விக்கப்பட்டது