பக்கம்:சீதா கல்யாணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சீதா கல்யாணம்

'நெருக்கி உள் புகுந்து, அரு நிறையும் பெண்மையும் உருக்கி, என் உயிரொடும் உண்டு போனவன் பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது கரும்பு வில் அன்று. அவன் காமன் அல்லனே!

(பொருப்பு உறழ் - மலை போன்ற கரும்பு வில் - கரும்பு வில்) -

'பெண் வழி நலனொடும், பிறந்த நாணொடும், எண் வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன்: மண் வழி நடந்து, அடி வருந்தப் போனவன் கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொல், ஆம்? (எண் வழி உணர்வு - எண்ணிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் அறிவு பகுத்தறிவு)

'இந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும், சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும், சுந்தர மணிவரைத் தோளுமே அல்முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே' இந்திர நீலம் - நீல ரத்தினம். குஞ்சி - ஆண் மக்கள் தலைமயிர்)

இப்படிச் சீதை இராமனை உருவெளித் தோற்றத் திலே கண்டு கண்டு வருந்திக் கொண்டிருக்கும்போது, பொழுதும் அஸ்தமித்து விடுகின்றது. செவ்வான மாகிய சிவந்த தலைமயிரும், இருளாகிய கருநிறமும் கொண்ட காலன், தென்றலாகிய பாசத்தை வீசிக் கொண்டு வந்தது போல, மாலைப் பொழுதும் வந்து சேருகின்றது. சீதையின் தாபமோ அதிகமாகின்றது. இந்த நிலையிலே சந்திரனும் நீலக் கடலில் உதித்து, தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/50&oldid=651213" இலிருந்து மீள்விக்கப்பட்டது