பக்கம்:சீதா கல்யாணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - சீதா கல்யாணம்

சனகனது அரச சபையிலே இப்படிப்பட்ட காரியம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, சீதை தன் கன்னி மாடத்திலிருந்து, தான் முன்னர் கண்ட கட்டழக னையே நினைந்து நினைந்து புலம்புகிறாள். இராமன் ஏந்திய தனு, அந்தத் தனுவை ஏந்திய கைகள், அம்புப் புட்டிலைத் தாங்கிய தோள்கள், அகன்ற மார்பு முதலிய அவயவ சவுந்திரியத்தில் உள்ளம் பறி கொடுத்து விடுகிறாள்.

நாண் உலாவுமேருவோடு நாண் உலாவு பாணியும் தூண் உலாவு தோளும், வாளி ஊடு உலாவுதுணியும், வாள் நிலாவின் நூல் உலாவு மாலை மார்பும், மீளவும் காணலாகும் ஆகின், ஆவி காணலாகுமே, கொல், ஆம்: (பாணி - கை. உலாவு - பூண்ட பொருந்திய போன்ற நிறைந்த அசைகின்ற)

இவ்வண்ணம் சீதை உள்ளம் தளர்ந்து புலம்பிக் கொண்டிருக்கும் போது, இராமன் வில்லொடித்ததை நேரில் பார்த்த சீதையின் தோழியான நீலமாலை ஒடி வந்து, மிகுந்த மகிழ்ச்சியுடன், முனிவருடன் வந்த அரசிளங்குமரரில் முன்னவனான இராமன் வில்லை முறித்தான்' என்று சீதையிடம் சொல்லுகிறாள். இந்த சந்தோஷச் செய்தியைக் கேட்ட சீதையின் உள்ளத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் தோன்று கின்றன. ஆம்! வில்லொடித்த வீரன், நான் முன்னர் கண்டு காதலித்த தலைவன்தானா? அல்லது வேறு ஒர் அரசிளங் குமரனா? ஒருவேளை நான் காதலித்த தலைவனாய் இல்லாவிட்டால், வில்லொடித்த காரணத்திற்காக மட்டும் இவனை மணம் புரிவதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/66&oldid=651252" இலிருந்து மீள்விக்கப்பட்டது