பக்கம்:சீதா கல்யாணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


 இரண்டாம் பதிப்பின் முன்னுரை

காரைக்குடி கம்பன் கழகத்தின் முதல் வெளியீடு என்ற பெருமைகுரியது"சீதா கல்யாணம்'என்ற இந்த நூல் கம்பராமாயணத்தின் பாலகாண்டத்திலிருந்து நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து.அதற்கான விளக்கங்களுடன் சிறுவர் சிறுமியர்களுக்கு கம்பனைக்ஷஅறிமுகப்படுத்த வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி. கம்பன் அடிப் பொடியின் உருவல் நண்பரான பாஸ்கரத் தொண்டைமானிடம், அந்தப் பணியை ஒப்படைத்தார். அவரும் அதைச்செய்து முடித்தார். நல்ல வரவேற்பு இருந்ததால், அடுத்து அயோத்தியா காண்டத்தையும் "பாதுகா பட்டாபிஷேகம்" என்ற தலைப்பில் கம்பன் கழகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அடுத்து ஆரண்யகாண்டம் 'மாயமான்' என்ற தலைப்பில் எழுதப்பட்டது தொண்டைமானவர்கள் அலுவல் நிமித்தம் வெளியூர்களுக்கும் சென்று விட்டதால், தொடர்ந்து எழுத முடியாமல் போயிருக்கலாம்.அப்போது நான் சிறுமியாக இருந்ததால், சீதா கல்யாணத்தையும்,பாதுகா பட்டாபிஷேகத்தையும் எனக்கு படித்துக் காட்டி, "உனக்கு விளங்குகிறதா?’ என்று கேட்டது நினைவிருக்கிறது. எனக்கு விளங்கினால், மற்ற குழந்தைகளுக்கும் விளங்கக் கூடும் என்று எண்ணியிருக்கலாம். அந்த நாட்களில் யார் வீட்டிலாவது திருமணம் என்றால், திருமணப் பரிசாக, சீதா.கல்யாணத்தையும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மலரும் மாலையும் என்ற கவிதையும் தந்தையார் பரிசாகக் கொடுப்பது வழக்கம். நானும் அதையே தொடர்ந்து கடைப்பிடித்தேன். பின்னர் நூல்கள் கைவசம் இல்லாமையால் அந்தப் பழக்கம் விடுபட்டுப் போய்விட்டது. இனி தொடரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. "சீதாகல்யாணம்’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக வந்திருக்கின்ற காரணத்தால், இந்த நூலை ஆர்வத்துடன், அழகாக அச்சிட்டுக் கொணர்ந்துள்ள நிவேதிதா பதிப்பகத்தாருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

               ராஜேஸ்வரி நடராஜன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/7&oldid=1367356" இலிருந்து மீள்விக்கப்பட்டது