பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


பூரீமுனியாண்டி விலாஸ் பிரியாணி ஹோட்டலில் அவனும் அவளும் முட்டை ஆம்லெட் சாப்பிட்டிருக்கிரு.ர்கள்: அர்த்தம் தெரியாத நண்பர்களாகி, அர்த்தம் தெரிந்தஅர்த்தமுள்ள காதலர்களாக மாறிய பிறகுதான், இத்தகைய ஒட்டுறவும் ஒட்டுதலும் கனிந்தன. பிரியப்பட்டு ஆம்லெட் தயாரித்திருக்கிருள். விருல்மீன் வறுவல் செய்திருக்கிருள் இதுவும் அவனுக்கு இஷ்டமான கறிதான். குமாரைத் தெரியாதா சுமதிக் கன்னிக்கு?

"சாப்பிடுங்க, குமார்.'

சோப்பிடுகிறேன், சுமதி,” என்றவன், "உனக்கு ஆம்லெட், வறுவல் எல்லாம் இருக்குதில்லையா?' என்று: கேட்டான்.

•ష్ట్ర! மகுடியின் நாதம் நல்லபாம்பைக் கவருவது இயல்பு.

முட்களைத் தவிர, வேறு எதையும் மிச்சம் வைக்காமல் கச்சிதமாகச் சாப்பிட்டான் குமார். எழுந்தான்; கை அலம்பினன். அபாய அறிவிப்புக் கைப்பெட்டியின் மீதிருந்த பச்சிலைச் செந்தூரச் சீசாவை எடுத்தான். இன்னம் கொஞ்சம் தண்ணிர் கொடேன், சுமதி”, என்று உருக்கமாக வேண்டினன்; நீட்டிய தண்ணிரைக் கைநீட்டி வாங்கினன்; இடது உள்ளங்கையில் கொட்டியிருந்த பச்சை இலைத் துாளே வாயில் கொட்டிக் கொண்டு மடக்'கென்று தண்ணீரை ஊற்றினன். சாப்பாட்டுக்கும், மருந்துக்கும் சேர்த்து, பெரிய ஏப்பமாகப் பரிந்தது. மறுபடியும் சுமதியைப் பார்க்க ஆரம்பித்தான். நீயும் சாப்பிட்டுவாயேன்; கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருக்கலாம்', என்ருன்.

கேட்ட கேள்விக்குப் பதில் எதையும் சொல்லாமல், "என்னவோ மருந்து சாப்பிட்டீங்களே? உடம்புக்கு என்ன?’ என்று விளுக்கணை தொடுத்தாள் சுமதி.

அவன் விரக்தியுடன் சிரித்தான். இந்த மண் வாழ்க்கையில் இந்தச் சிரிப்பு ஒன்றுதான் பாக்கி என்ற