பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


நானும் நிதர்சனமாக-பிரத்யட்சமாக இருக்கோம்: ஆகச்சே,நீங்க புது குமாராக மாறவேணும்; உங்களுக்கென்று ஒரு புது இல்லற வாழ்க்கையை உண்டாக்கிட வேணும். டைம் ஆச்சு. நான் புறப்படுறேன். இது உங்க சொந்த வீடுமாதிரி,சுமதி உங்களுக்கு எப்பவும் சிநேகிதிதாளுக்கும்... வரட்டுமா?’ என்று தேறுதல் சொல்லி விடை பெற்ற விவரத்தை எண்ணினுள்; முகத்தின் கலவரமும் குழம்பமும் ஒடிவிட்டன.

சுமதி!' என்று அழைத்தவண்ணம், குமார் நெருங்கி, வந்தான்.

உஷ்ணக் காற்றுப் படவே, சுமதி தன்னுணர்வைப் பெற்ருள்; விழித்தாள்; எதிரும்புதிருமாக நிற்கும் குமாரை

ஊடுருவிப் பார்வையிட்டாள். கைகால்கள் நடுங்க. ஆரம்பித்தன. குமார் மிருகமாகிக் கொண்டிருக்கிருஞ?

சுமதி!' ஆத்திரமாகப் பார்த்தாள் சுமதி. *சுமதி:

மூன்ரும் தடவையும் அழைத்தான் குமார். அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை; பேசாமல் கொள்ளாமல் மாலை மாலையாகக் கண்ணிரை வடித்துக் கொண்டேயிருந்தான்.

பெண் என்ருல் பேயும் இரங்கும் போது, பேய் என்ருல், பெண்ணும் இரங்க வேண்டாமா?

'குமார், நீங்க நல்ல மனிதர்; அழக்கூடாது. வாங்க. சாப்பிடலாம்”, என்று கெஞ்சுதலுடன் பேசினுள் சுமதி.

மந்திரத்துக்குக் கட்டுவிரியன் கட்டுப்படும். குமார் கட்டுப்படமாட்டான?-சாப்பிட அமர்ந்தான்; “முட்டை ஆம்லெட்' என்ருல் அவனுக்குப் பிரியம் அதிகம். தெற்கு அலங்கத்தில், பிரகதீஸ்வரர் ஆலயத்தின் கோபுரக் கலசம் பளிச்சென்று தெரியும் இலக்கில் அமைந்திருந்த