பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


'சுமதி!' என்று நெஞ்சால் விளித்தான் குமார்சுமதியின் முன்னுள் காதலன்!

சுமதி நேரில் வந்தாள். நினைவில் வந்தவள் நேரிலும் வந்துவிட்டாளே?

அம்மாக்காரி சுமதி, சுமதி என்று கூப்பிட்டுக் கொண்டி ருக்கிருள்!

"சாப்பாடு ரெடி, நீங்க கைகழுவிக்கினு வாங்க; சாப்பிடலாம். அம்மா கூப்பிடுருக; இதோ வந்திடுறேன்!”

மறுபடி, சூன்யம்!

குழந்தை அடங்கிவிட்டது.

சுமதி திரும்பினுள்.

டேஞ்சர் சிக்னல்’ கைப்பெட்டியைப் பிரித்துக் கொண்டிருந்த குமார், சிறிய சீசா ஒன்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு எழுந்தான். சுமதியை நேர்கொண்ட பார்வையால் ரசித்து எத்தனை நாட்கள் - நாட்களா?யுகங்கள் ஆகிவிட்டன!-அவ்வாறே நேர்கொண்ட பார்வை யால் பார்த்தான்; பார்த்தான்; பார்த்துக்கொண்டே யிருந்தான்!...

சுமதிக்கு லஜ்ஜை மேவிடவே, அச்சமும் மேலிட்டது. "ஏன் இப்படிப் பார்க்கிருர் குமார்?-அத்தான் அச்சகத்துக் குப் புறப்பட்டபோது, குமார், உங்க சொந்த வாழ்க்கை யிலே ஒரு எதிர்பாராத திசைமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனலும், எல்லாத்திற்கும் மேலே, உங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் நடுவிலே இருக்கக்கூடிய அந்தத் தூய்மையான அன்பும் பாசமும் எப்பவுமே திசை திரும்ப முடியாது. உங்களை நான் அறிஞ்சவன்; எங்களையும் நீங்க அறிஞ்சவர்தான்! நமக்கு இடையிலே எந்த ஒரு கெட்ட நோக்கத்துக்குமே இடம் இருக்காதுதான்!...எனக்கோசரம் அனுதாபப்பட நீங்களும் உங்களுக்காக அனுதாபம் கொள்ள