பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


கோட்டை தகர்ந்து பொடிப் பொடியாகிடுச்சே? சுமதி, நீ இல்லாத இந்த மண்ணிலே நான் எப்படி உயிர் வாழ்வேன்?...ஊஹஅம், முடியாது; முடியவே முடியாது: இனி நான் நடைப்பிணம்தான்!...”

தெருவிலே கோழி கூவிக்கொண்டிருக்கின்றது. மணி பன்னிரண்டைத் தாண்டிவிட்டது.

பட்டணத்து நாகரிகக் கோழிக்கு இப்போதுதான் பொழுது விடிந்திருக்கிறது போலும்!

இளம்மீசையில் பட்டுத் தெறித்தன சுடுநீர்ச் சரங்கள். நெடுமூச்சுப் பிரிந்தது. குமாருக்கு இருப்புக்கொள்ளவில்லை. சுந்தர் வேலைக்குப் போகாமல் இருந்திருந்தாலாவது, பேசுவதற்கேனும் துணை கிடைத்திருக்கும். அத்திபூத்த மாதிரி சுமதிவந்து சாப்பாடு தயார்' என்பதாக அறிவித்துப் போளுள். போனவள் போனவள்தான். இன்னமும் திரும்ப வில்லே காதல் பொய்யாய் - கனவாய் - பழங்கதையாகி விட்டதும், அவளும் பொய்யாய்-கணவாய்-பழங்கதை யாகிவிட்டாளே?-பட்டணத்தில் சுமதியின் இல்லத்திலே இருந்துகொண்டு சுமதியை நினைத்த நெஞ்சத்தில் பள்ளி அக்கிரகாரத்திலிருந்த பச்சை இலைச் சாமியார் தோன் றினர். அதே வேளையில், சுந்தரும் தோற்றம் தந்தான். கொண்டவளை இழந்தவன் துர்ப்பாக்கியவான்தான்!ம்.சுந்த ருக்காக நான் அனுதாபப்படுகிறேன்; ஆல்ை, எனக்காக அனுதாபப்பட யார் இருக்காங்க?-கடைசிப்பட்சம், சுமதி என் நிமித்தம் அனுதாபப்படக்கூடத் தயாராக இல்லையே?... வெறும் சோதிப்புக்கள் மட்டுந்தான் வாழ்க்கையா?

முகப்புத் தாழ்வாரத்தில் நாயொன்று மோப்பம் பிடிக்கிறது.

கதவுகள் திறந்து கிடந்தால் நாய்தான் வரும்!

சாத்தக் கூடாதோ?