பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்று

கலாய மயில்

குமார் இப்பொழுது சுந்தரின் விருந்தாளி; சுந்தரின் குடும்ப நண்பன் ஆயிற்றே அவன்?

உச்சிவேளை.

உள்ளே போன சுமதி என்ன ஆளுள்?-இன்னமும் திரும்பினபாடில்லை - குமாருக்குக் கொட்டாவி வந்தது. அசதிவேறு. நேற்று ராத்திரி சிவராத்திரி விடிகாலையில் பஸ் ஏறினன். உட்கார, எழுந்திருக்க இயலாமற்போயிற்று; நெரிசல் அப்படி. இங்கே வந்தால், மனக்கனவை மண்ளுேடு மண்ணுக ஆக்க ஒரு பேரதிர்ச்சி விதியாக் காத்திருந்தது! இந்நிலையில், தூக்கம் எப்படி வரும்? துக்கம்தான் வந்தது. இரவு பூராவும் சுமதி பஜனை'தான் ஆலுைம், மேனியின் ஒரு முனையில் மதமதர்ப்பு அடிக்கடி தோன்றிக்கொண்டி ருந்தது! சுமதி: என்று விளித்தான்; நொடியில் தோன்றினுள் அவள்; மதுக்குடம் ஏந்திய மணமலராகத் தரிசனம் தந்தாள் சுமதி!-‘எப்படிப்பட்ட பயங்கர முடிவு ஏற்பட்டிருக்கிறது? சுமதி இனி எனக்கு இல்லையா? நினைச்சுப் பார்க்கவே முடியலையே? கனவில்கூட எண்ணிப் பார்த்திராத முடிவல்லவா இது? காதலை வளர்த்து, அதே பண்போடு கனவுகளேயும் வளர்த்து வந்த ஒரு வருஷத்தின் மனக்