பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

சுந்தருக்கும் அப்படித்தான்! சிலையோடி நின்ற சுசீலாவின் மனங்கவரும் அந்தப் புன்னகையின் பின் புலத்திலே ஒயிலோடு வணக்கம் தெரிவித்த காட்சியை அவனாலும் மறக்க முடியாது; என்றுமே மறக்க முடியாது:

'வியாழதசை' கூடிவந்தது.

கூடினார்கள்!

‘என் மருமகப் பெண்ணோட வயிற்றிலே ஒரு பூச்சி பொட்டைக் காட்டுடி, ஆத்தா!’ என்று பிரார்த்தனை செய்யலானாள் சுந்தரின் தாய். காலம் ஓடிவிடவே, சுந்தரின் தாயும் விதி வழி ஓடிவிடவேண்டியவள் ஆனாள்!

நல்லகாலம், அந்த அன்னையின் பிரார்த்தனை மாத்திரம் ஓடிவிடவில்லை!

டபரா ஒன்று தவறிவிழுந்த ஒசை ஒலித்தது; எதிரொலித்தது.

சுந்தர் மாதிரியே சுசீலாவும் இப்போதுதான் சுயப் பிரக்கினை அடைந்திருக்க வேண்டும்:

"அத்தான்!”

"சொல்லு, சுசீ!"

"சொல்ல வரல்லீங்க, கேட்க வந்தேனுங்க!”

"கேளேன்!"

"தந்தி கிடைச்சடியும் என்ன நினைச்சீங்க?"

"பிரஸ்ஸிலே மெர்ஸிடைஸ் மிஷின் ராட்சசத்தனமாய் ஒடிக்கினு இருக்கையிலே தந்தி வந்திச்சு; தந்தியை வாங்கினதும், ஒரு ஸெகண்ட் என் மூச்சே நின்னிடும் போலிருந்திச்சு; தந்தியைப் படிச்சதும் அந்த மூச்சு என் மெஷின் மாதிரியே ஒடத் தலைப்பட்டிச்சு தந்தி கிடைச்சதும் நான் என்ன நினைச்சேன்னு கேட்டாயே? - உன்னை நினைச்சேன்; உன்னையேதான் நினைச்சேன்! என்னுடைய