பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}9

தன் பாட்டில், தன் போக்கில், தன் நிலையில் முணுமுணுத் தான். கண்ணிர் முட்டியது; 'அமு தூற்றினை யொத்த இதழ்களும், நிலவூறித் ததும்பும் விழிகளுமாக அவனது உள்ளக்கிழியில் சுமதி காட்சியளித்தாள்; புனையா ஒவிய மெனத் தரிசனம் தந்தாள். பாடல் தொடர்ந்தது. 'நீ என் இன்னுயிர் சுமதி!'.குமார் மேனி சிலிர்த்தான். கண்களை இறுக முடித் தீவிரமாகவும் தீரமுடனும் சிந்தனை செய்தான்; பிறகு, கண்களைத் திறந்தான்; வேர்வை ஆடிப்புனலாய் ஒடியது. எழும்பினன்; கைப்பெட்டியைத் திறந்தான்; இன்னெரு சின்னக்குப்பியைத் தேடினன் தேடினல் கிடைக்கும்தானே?...

ஈஸ்வரா!--

தேடிக் கிட்டியதைச் சிக்கெனப் பிடித்தான் குமார். முடியைப் பிரித்தான்; நடுக்கூடத்திற்கு மீண்டும் மீண்டான்; எட்டத்தில் நகர்த்தி வைத்த செம்பை எடுத்தான்: கால்மாட்டில் உருண்டு கிடந்த தம்ளர் வந்தது; நீரை ஊற்றி நிரப்பினன். வெளுத்திருந்த அந்தச் சின்னக் குப்பியில் அஞ்ஞாத வாதம் செய்த பச்சை இலைத் தூள் மருந்தைத் தம்ளர் தண்ணிரில் தூவிக் கலக்கினன். பாதுகாப்பாக ஒரு முடுக்கில் மறைத்தும் வைத்தான். பள்ளி அக்கிராகாரச் சாமியாரை ஒருதரம் நினைத்தான்; இருதரம் தோன்றினர் சாமியார். அவனுக்குப் பரபரப்பும் படபடப்பும் கூடின. 'சுமதி-என்னேட ஆருயிர்ச் சுமதி திரும்பி விடுவாளல்லவா? இருப்புக்கொள்ளவில்லே அவனுக்கு. அவனுடைய காதல் இதயத்தின் வரவு செலவுக் கணக்கைப் பொறுத்தமட்டில் சுமதி என்றுமே இருப்புப் புள்ளிதானே?

நேரம் கெட்ட நேரம், தெருவில் நடமாட்டத்தைக் காணவில்லை. வறட்டுக் கெளரவத்தில் வெய்யில் காய்ந்தது.

வெளிவாசல் கதவுகள் சொர்க்க வாசலின் கதவுகளா?