பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110


மூடினன் குமார்; உள்வசமாகத் தாழிட்டான். அன்புக்குத்தான் அடைக்குந்தாழ் இல்லையாம்!-வெறுங் கதவுகளுக்குக் கேடு என்ன வந்தது?

நடுக்கூடம் அப்போது அவனுக்குச் சொப்பன மாளிகை யாகத் தோன்றியிருக்கக் கூடும். உள்கூடத்தில் வந்து அமர்ந் தான்; மூடியிருந்த கதவின் பின்னே தலையணையை நகர்த்திச் சுவரோடு சாய்ந்தான்; வெளி உலகம் அவனுக்குத் தெரியவே இல்லை பேஷ்!-பின்கட்டுக்கு ஒடித் திரும்பிய பார்வை சுமதியின் மேலான நல்வரவுக்குக் கட்டியம் கூறியது.

ஜாதிமல்லி மனக்கிறது.

அப்படியென்ருல், சுமதி வருகிருள் என்று அர்த்தம்!

வா, சுமதி!' “வந்திட்டேனுங்க!'

அம்மாடி!-இப்போது தான் பழைய சுமதியாகத் தெரீ கிருள்! குமாருக்குக் களி பிடிபட மறுத்தது. பிடி இடைச் சுமதி சகஜமாகப் பேசத் தொடங்கி விட்டாள்!

"உட்காரேன்!'

'ம்...அது சரி, நீங்க தூங்கிப் போயிருப்பீங்கண்ணு. தினைச்சிருந்தேன். உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டே?”

'ஊஹஅம்; நான் தொண்டனல்ல; நான் ஒரு துரதிர் ஷடசாலி!”

'அப்படியெல்லாம் மனசொடிஞ்சு போயிடாதீங்க. வாழ்க்கை அமைகிறதுக்கும் வாழ்க்கையை அமைக்கிற துக்கும் வழியா இல்லை! என்னைத் தவருக நினைக்கலேன்னு, நான் சொல்வதெல்லாம் இதுதான்; நாம் ரெண்டு பேரும் காதலிச்சது எவ்வளவு நிஜமோ. அத்தனை அளவுக்கு நிஜமே தான் நம்மோட காதல் கனவாக ஆனதும் நான் என் அக்காளோட ஆணைப்படி நாளைக்கு என் அன்பான அத்தா