பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 :

னுக்கு வாழ்க்கைப்படப் போறேன். நீங்களும் உங்க மனச் சாட்சியின் ஆணைப்படி நல்ல பெண்ணைத் தேர்ந்து கலியாணம் செஞ்சுக்கிடுங்க...நாம இரண்டு பேரும் இப் போது காதலர்களல்ல!-மறந்திடாதீங்க; நீங்களும் நானும் சிநேகிதர்கள். நான் உங்களுக்குச் சிநேகிதி-அத்தான் சொன்னமாதிரி; நீங்க எனக்குச் சிநேகிதர்-முன்பு நான் அடிக்கடி சொல்வேனே, அதுமாதிரி அவ்வளவுதான்!-- வாழ்க்கைக.ட அவ்வளவுதான்! இதுக்காகப் போய், மருந்து மாயம்னு நம்பி, உங்களை நீங்களே அழிச்சு நாசம் செஞ்சுக் கிடுறதை நான் விரும்பவே மாட்டேன்'

சுமதியா இப்படிப் பேசுகிருள்?-வாழ்க்கையை எடை போடக் கிடைத்த படிக்கற்கள் அவள்வரை இவ்வளவுதான? குமாருக்குச் சுமதி மேலும் ஒரு புதிர்க் கோளமாகத் தோன்றினள். புதிர்களின் முழுவடிவமா சுமதி?- சாப்பிட் டாயா சுமதி' என்று பரிவுசூழக் கேட்டான் குமார்.

"எங்க சாப்பாடு இன்னிக்கு நாலு நாலரைக்குத்தான். காலம்பற லேட்டாய்த்தான் இடியாப்பம் தின்னேன். குழந்தையோடே போராட எங்களுக்கு ராத்திரி போதுவ தில்லை. அம்மாவுக்கு தள்ளாமை வந்தாச்சு; அசந்து படுத்துத் துரங்குருங்க. நான் அத்தானுக்குச் சாப்பாடு அனுப்பிச்சிட்டு, உங்களுக்குச் சாதம் போட்டேன். ராஜாக் கண்ணுக்கு மாவு கலந்து புகட்டினேன்; அவனும் நல்லபிள்ளையாய்த் தூங்கிட்டான். கொஞ்சமுந்தி ஒரு வாய் ஹார்லிக்ஸ் குடிச்சேன்: பத்து நிமிஷமாச்சும் அசதிதிரப் படுத்து எழுந் தால்தான், உடம்பு கலகலப்பாக இருக்கும். பேசிக்கிட்டிருக் கலாம்னு என்னமோ நீங்க சொன்னது நினைப்பு வந்திச்சு; ஒடியாந்தேன்!”

ஒரே மூச்சாக எல்லாவற்றையும் அளந்து கொட்டித் தீர்த்தாள் சுமதி. இவ்வளவு நாழி இருமல் மூச்சுக் காட் டாமல் தாக்குப் பிடித்ததற்கே குன்றக்குடிக்குக் காவடி எடுக்க வேண்டும். இனி, தாளாது. சிணுங்கல் இருமல் சிணுங்கும் மழலையாக வெடித்துத் தொலைத்தது.