பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


குமாருக்குச் சுமதியைத் தெரியாதா? சுமதிக்கு இரண்டு நிமிஷம் சேர்ந்தாற் போலப் பேசிவிட்டால் இருமல் வந்து விடுமென்று தெரிந்துதானே அவளுக்கென்று பிரத்தியேக மாகத் தண்ணிரைத் தயாரித்துத் தயாராக வைத்திருக்கிருன்! 'சுமதி, முதலிலே தண்ணீரைக்குடி, இந்தா,’ என்று சொல்லி, அந்தத் தண்ணிர்த் தம்ளரை உடலில் பீறிட்ட கிளர்ச்சியுடன் நீட்டினன் அவன்.

குழந்தை மருந்தைக் குடிக்கிற பாவனையில், சுமதி 'அந்தத் தண்ணிரை’ ஒரே வேட்கையுடன் குடித்து முடித் தாள். “ரொம்ப நன்றிங்க, மிஸ்டர் குமரர்!’ என்று நன்றி யறிவு பாராட்டினுள்.

சுமதி!'

மூச்!...

சுமதி:

ஊகம்!...

மறுகணம்

நினைவிழந்து, மயங்கித் தரையிலே சாய்ந்து விட்டாள் கன்னிப்பூ!

'சுமதி!...”

குமார் மண்ணிலே கால்பாவி, விண்ணிலே பறக்கிருன்!

கோலக் கலாபமயில் அலங்கோலமாகக் கிடக்கிறது!...

'சுமதி...சுமதி...'

$5.

&

岭峻神曲*4

குமார் அழுகிருன்; அழுது கொண்டேயிருக்கிருன்!இருட்டிலே!...

விதிக்கு அழக்கூடத் தெரியுமோ?