பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


வோடு போராடத்தான் பொழுது காண்கிறது; துரங்க எங்கே நேரம் கிடைக்குது? அபூர்வமாய்க் கிடைச்சிருக்கிற இந்தச் சின்னஞ்சிறு பொழுதுக் காச்சும் அசதி தீர நல்லாத் துரங்கட்டும் காலடியில் இருந்த வெண்கலச் செம்பில் எஞ்சி யிருந்த தண்ணீரைக் கவிழ்த்து முகத்தில் தெளித்துக் கொண்டு திரும்பிய சமயத்தில் செம்பு கை தவறிக் கீழே விழ்ந்தது. கொட்டின நீரைக் கூட்டி அள்ளவா இயலும்? தண்ணிர்தானே?-ஒடித் தொலேயட்டும்!

ஆளுல்...

அதிர்ந்தெழுந்த அரவம் கேட்டு, அரவம் கண்டவளாக வாரிச் சுருட்டிக்கொண்டு, உறக்கம் கலந்து எழுந்தாள் சுமதி, கண்களைப் பதட்டத்துடன் துடைத்துக் கொண்டு, கனவு கண்டு விழிப்பவள் போலச் சுற்றுமுற்றும் பார்வை யைத் திசை மாற்றித் திசை விலக்கியவாறு விழித்து விழித்துப் பார்த்தாள். இனம் புரியாத ஏதோ ஒரு பயம் அவளேக் கூண்டுப் புழுவாக அரித்தது. உடல் நடுங்கத் தலைப்பட்டது. திருடன் வந்துபோனல் அதிர்ச்சி ஏற்படாதா? அப்படிப்பட்ட அதிர்ச்சியின் உணர்வுதான் பயமாக உருக் கொண்டு, உருகாட்டுகிறதோ? பயமென்ருல், என்ன பயும்?...தன்னைத் தானே-தனக்குத்தானே தலே குனிந்து நோக்கிக் கொண்டபோது, கொட்டாவி பிரிந்தது; துரங்கி எழுந்தவளுக்கு அசதி குறைவதற்குப் பதிலாக, அசதி கூடி விட்டது போலவும் தோன்றியது; திரும்பவும் கொட்டாவி திரும்பிற்று. முகத்தை நிமிர்த்தினுள். அன்போடும் அக்கறையோடும், ஏக்கத்துடனும் அனுதாபத்துடனும் இமைபாவாமல் கவனித்துக் கொண்டிருந்த சுந்தர், அக்கணம்தான் அவள் விழி விரிப்பிலே விழுந்திருக்க வேண்டும்!-'ஓ! அத்தான்!...” என்று ஆவலோடு அழைத்து நிறுத்தினள். நீங்க வந்து நேரமாச்சா?’ சோவிப் பொத்தான்களைச் சரி பார்த்துக் கொண்டாள்.

சுந்தர்: பத்து நிமிஷம் ஆச்சு!”

ஒஹோ!...குமார் எங்கே? ஆளேயே காணலிங்களே?” என்று கேட்டாள் சுமதி.