பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


விதியின் எழுத்தை கேவலம், மனிதர்களாகிய நாம் எப்படிக் கிழிக்க முடியும்? குமார், நீங்க எங்களை, அதாகப்பட்டது, என்னையும் என் சுமதியையும் மறந்திடாதீங்க!-நீங்க எங்க குடும்ப நண்பர்!-இந்த உண்மையை-உரிமையை-உறவை உங்களாலே மறக்கவும் வாய்க்காதுங்க!...அநேகமாக பங்குனி பத்து, பதினஞ்சு தேதி வாக்கிலே எங்க கல்யாணம் நடக்கலாம்; அழைப்பு அனுப்புவோம். ஒருவாரம் முந்தியே வந்திருந்து எங்க திருமணத்தை நீங்கதான் நல்லதனமாய் நடத்தி வைக்கவேனும், குமார்.’’ என்று தாழ்.குரலில் கேட்டுக் கொண்டான்.

“ஆகட்டும், சுந்தர்!’ சுந்தரின் நன்றியில் குமாரின் உடல் விம்மியது.

குமார் விடைபெற்றதும், சுந்தர் தன் அறைக்கு மடங்கினன். சுசீயின் படம் தென்பட்டது; இதயம் குலுங்கியது.

குமார் வெளிவாசலை நெருங்கியதும், சுமதியைத் திரும்பிப் பார்த்தான்; நான் போயிட்டு வாரேன், சுமதி' என்று பயணம் சொல்லிக் கொண்டான்.

ஆனல், சுமதி வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந் திருந்தாள், குமார் தன்னிடம் பயணம் சொல்லிக் கொண்டதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

சுமதியின் நிலை குமாருக்குத் தவிப்பை உண்டாக்கி யிருக்க வேண்டும். திடீரென்று எதையோ மறந்துவிட்டு, பின்னர் மறந்ததை திடீரென்று நினைவுபடுத்திக்கொண் டவன்போல் சட்டைப்பையைத் தடவிப் பார்த்தான்; வேர்வை வழிந்து கொண்டிருந்தது. 'சுமதி, உனக்கு உடம்புக்குச் சரியில்லையென்ருல், இந்தப் பொட்டணத் திலுள்ள மருந்தைச் சாப்பிடு. உடம்பு மட்டுமில்லை, உள்ளமும் சாயாகிவிடும்,' என்று கூறி, சிறிய பொட்டலம் ஒன்றை அவள் கையில் வைத்தான் குமார்.