பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


துரோகம் செய்தவன் சதி இதுவாகத்தான் இருக்கும் போலும்!

சுமதி இரண்டு செட் காப்பியுடன் திரும்பி வந்தாள். குமார் பெட்டியும் கையுமாகத் தயாராகிக் கொண்டிருப்பதைக் கண்டதும், அவளுக்குச் சஞ்சலம் ஏற்பட்டது. குமாரின் பயணத்துக்கு அத்தான் ஒ. கே. சொல்லிவிட்டிருக்க வேண்டும். இந்தாங்க, காஃபி!” என்று விளித்து, ஆளுக்கொன்று நீட்டினுள்.

காப்பித் டம்ளரை வாங்குகையில், குமாரின் கைகள் இரண்டும் அத்துமீறி நடுங்கின!

கமிஸ்டர் குமார், உங்க கை இரண்டும் ஏன் இப்படிப் பயங்கரமாக நடுங்குது?’ சுமதி வினவினள். அவள் மனச்சாட்சி ஏன் அப்படி நடுங்க வேண்டுமோ?

அதான் எனக்கும் புரியலை, சுமதி!'-குமார் தவித்தான். காப்பியைக் குடித்து முடித்தான்.

திடுதிப்பென்று சுந்தருக்கு அப்படி என்ன புதுச் சிந்தனை வந்துவிட்டதாம்?

'காப்பி ஆறிடப் போகுதுங்க, அத்தான்!'

'காப்பிக்குச் சுளுவிலே ஆறிவிடத் தெரியுதே, சுமதி!' குமார் திடுக்கிட்டான். சுமதி துணுக்குற்றள்; சோகமும் உருக்கமும் வழிய, காப்பி ஆறினுல்தான் உங்களுக்குப் பிடிக்காதே?’ என்று கெஞ்சினள்

சுமதியை ஏக்கத்தோடு பார்த்தபடி, காப்பியை இயந்திர கதியில் குடித்து வைத்தான் சுந்தர். பெட்டியுடன் நின்ற குமாரை நோக்கினன். குமார், மனசு குழப்பிக் கிடக்கிற எனக்கு நீங்க கூடமாட இருந்தாலாச்சும், கொஞ்சத்துக்குக் கொஞ்சம் ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருக்கலாம். உங்க மனசும் நிம்மதியாக இருக்காது, சரி, புறப்படுங்க!