பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


இப்போது சுமதியின் உள்மனத்தில் இனம் விளங்காத அமைதி கனியத் தொடங்கிவிட்டது. செவ்வதரங்களில் இனிமையான மலர்ச் சிரிப்பு விரிந்தது. 'ஆளு லும், உங்களுக்கு இத்தனை கூச்சம் கூடாதுங்க, மிஸ்டர் குமார்!’ அவளே கூச்சத்தோடுதான் சொன்னுள்.

'நாலும் தெரிந்தவர் நம்ம குமார்; அத்தோடு, நம்ம குடும்பச் சிநேகிதர். வாங்க, உள்ளே போய்க் காப்பி சாப் பிட்டுட்டுப் பேச வேண்டிய குறையைப் பேசித் தீர்க்கலாம்,' என்ருன் சுந்தர்.

குமாரின் முகம் அப்போது பிரகாசம் அடைந்து வந்தது. சுமதியையும் சுந்தரையும் பரிதாபமாகப் பார்த்தான்; மறுபடி நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டான். பிறகு, தயக்கத்துடன், நான் இன்னிக்கு ராத்திரி ஊருக்குப் புறப் படலாம்னு நினைக்கிறேன்,' என்று கூறினன்.

குமார் ஊருக்குப் புறப்படப் போவதாகத் தெரிவித்த தகவலைக் கேட்டதும், அவளையும் அறியாமல் ஏக்கத்தின் உணர்ச்சி ஊடாடத் தொடங்கியது. அவளேயும் மீறிக் கொண்டு கண்கள் வேறு கலங்கிவிட்டன. சொப்பனத்தில் கண்டது போலே என்னென்னவோ காட்சிகள் ஆரம்பமும் முடிவும் இல்லாமல் தோன்றலாயின; அக்காட்சிகளை எண்ணிப் பார்த்துப் பகுத்தறிந்து இனம் கணிக்கவும் இயலாமல் இருந்தது. ஆனலும், நடுக்கம் மட்டும் உள் வட்டமாகச் சுழித்து உறுத்திக் கொண்டிருக்கிறது, கொஞ்ச நேரமாக!-நான் எப்படித் துரங்கிப் போனேன்? விட்ட குறையின் தொட்ட குறையாக முளைத்தெழுந்த இந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவளுக்குப் பதில் காணத் தெரியவில்லை: "தாயே, அங்காளம்மை உள்ளுணர்வு அவளே என்னவோ பண்ணிக் கொண்டேயிருக்கிறது!...

தெரு வழியே யாரோ ஒருவன் கும்மாளம் போட்டுக் கொண்டு, தட்டித் தடுமாறி நடந்து கொண்டிருக்கிருன். நம்பிக்கைக்குப் பாத்திரமான சட்டத்திற்கு நம்பிக்கைத்

சீ-8